உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கா?

08 Dec, 2023 | 04:38 PM
image

இன்றைய நவீன காலத்தில் பலருக்கும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. அதனால் தான் பல்வேறு நோய்களுக்கும் எளிதில் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, தூக்கத்திற்கு முன்னுரிமையளிப்பது, உடலை நீரேற்றமாக வைத்திருப்பது, உடற்பயிற்சி செய்வது போன்ற சில தினசரி பழக்கவழக்கங்கள் கடைப்பிடிப்பதன் மூலம் நாம் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். 

* இது நோய்கள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகின்றது. இவ்வாறு நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சில பழக்க வழக்கங்கள் குறித்து அறிந்துகொள்வோம். 

* நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு சீரான உணவு மற்றும் போதிய நீரேற்றத்துடன் நாம் இருப்பது அவசியமாகும். இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் தேவையான ஆற்றல்களையும் வழங்குகிறது.

* நாம் ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒருநாளைக்கு அதிகபட்சம் 7-9 மணிநேரம் தூங்க வேண்டும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி தொற்று நோய்களிடம் எதிர்த்து போராட உதவுகிறது. 

* தினமும் மேற்கொள்ளும் வழக்கமான உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் நோயெதிர்ப்பு உயிரணு இயக்கம் மற்றும் எதிர்வினைக்கு உதவுவதோடு, நாம் உடலின் பாதுகாப்பை பலப்படுத்துகிறது. 

* மன அழுத்தத்தினால் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு குறைய தொடங்கும். இது உடலில் உள்ள ஹோர்மோன்களின் செயல்பாடுகளிலும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திவிடும். மன அழுத்தத்தில் இருந்து நேர்மறையான மனநிலைக்குத் திரும்புவதற்காக யோகா, தியானம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

- கே.ஆர்.கோபி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15