மீண்டும் நேருக்கு நேர் மோதும் ரஜினி - கமல்...வெற்றி யாருக்கு.?

08 Dec, 2023 | 04:38 PM
image

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த "ஆளவந்தான்" மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "முத்து" ஆகிய இரு பிளாக்பஸ்டர் படங்களும் ஒரே நாளில் உலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில் இன்று  வெளியாக உள்ளது.

பொதுவாக ரஜினி, கமல் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் இரு படங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், இன்றும் அதே போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1995 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியான மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் முத்து. இந்த படத்தில் மீனா, சரத்பாபு, ராதாரவி, ரகுவரன், செந்தில், வடிவேலு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். 

அதேபோல் கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தில் ரவீனா டாண்டன், மனீஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

குறித்த இரு  பிளாக்பஸ்டர் படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் நடிகர்...

2025-01-25 16:23:33
news-image

ராமாயணா தி லெஜன்ட் ஆஃப் பிரின்ஸ்...

2025-01-25 16:22:44
news-image

'ஆக்சன் கிங்' அர்ஜுன் நடிக்கும் 'அகத்தியா'...

2025-01-25 15:53:24
news-image

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட 'ட்ராமா'...

2025-01-25 15:52:56
news-image

மலேசிய பினாங்கில் 17வது எடிசன் தமிழ்...

2025-01-25 09:34:34
news-image

குடும்பஸ்தன் - திரைப்பட விமர்சனம்

2025-01-24 16:20:43
news-image

குழந்தைகள் முன்னேற்ற கழகம் - திரைப்பட...

2025-01-24 16:20:13
news-image

வல்லான் - திரைப்பட விமர்சனம்

2025-01-24 16:19:42
news-image

பாட்டல் ராதா - திரைப்பட விமர்சனம்

2025-01-24 16:19:24
news-image

'ஓஃபீஸ்' இணைய தொடரின் அறிமுக பாடல்...

2025-01-23 15:35:32
news-image

நடிகர் கவின் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்...

2025-01-23 15:33:36
news-image

மார்ச்சில் வெளியாகும் சீயான் விக்ரமின் 'வீர...

2025-01-23 15:04:22