ரஞ்சித்திற்கு வாழ்த்து தெரிவித்த தங்கலான்.!

08 Dec, 2023 | 04:38 PM
image

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஜனவரி 26 ஆம் திகதி 'தங்கலான்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள "கே.ஜி.எஃப்" பகுதியில் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு  எடுக்கப்பட்ட கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்ததையடுத்து, இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித் இன்று தனது 41  வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு 'தங்கலான்' படக்குழுவினர்  ட்விட்டர் பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், "உங்கள் கலைத்திறன் உண்மையிலேயே சினிமாவிற்கு கிடைத்த பரிசு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right