ஊடகங்களை நியாயமான முறையில் கண்காணிக்க வேண்டும் - பந்துல குணவர்தன

08 Dec, 2023 | 06:04 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களை அடிப்படையாக கொண்டு சமூக விரோத செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

ஊடக நெறிமுறையை கடைப்பிடிப்பதற்கு ஊடகங்கள்  நியாயமான முறையில் கண்காணிக்கப்பட வேண்டும். உத்தேச ஒளி மற்றும் ஒலிப்பரப்பு சட்டமூலம் அடுத்த ஆண்டு சட்டமாக்கப்படும்  என போக்குவரத்து, ஊடகத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல  குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற  2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்    வெகுஜன ஊடகம் மற்றும் துறைமுகம்,கப்பற்றுறை, மற்றும் விமான சேவைகள்  அமைச்சின்   செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பெறுமதி சேர் வரியில் நூல் பதிப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறோம். சார்க் வலய நாடுகள் ஏதும் நூல் பதிப்புக்கு  வற் வரி விதிக்கவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிடுகிறார். சார்க் வலய நாடுகள் ஏதும் வங்குரோத்து நிலையடையவில்லை என்பதை குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

 பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தான் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரச கடன்களை செலுத்தாமல் அந்த நிதியில் தான் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுகிறது.

எமது ஆட்சியில் போதுமான நிதி இருந்தது என்று  எதிரணியின் சிரேஷ்ட உறுப்பினர்  லக்ஷமன் கிரியெல்ல குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.

சுதந்திரத்தின் பின்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் அனைத்தும் கடன் பெற்று அரச நிர்வாகத்தை முன்னெடுத்துள்ளன.

கடன் பெற முடியாத போது இருக்கும் தேசிய வளங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவும் முடியாத போது நாணயம் அச்சிடப்பட்டுள்ளது.இதுவே உண்மை இதனை எவராலும் மறுக்க முடியாது. 

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி,ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கு குறைந்தளவிலான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. நான் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான சம்பளத்தை கூட பெறுவதில்லை.

அரச நிதியை மோசடி செய்யாமல் நான் அரசியலில் ஈடுபடுகிறேன்.ஆனால் எனது வீடும் தீக்கிரையாக்கப்பட்டது.

பொருளாதார பாதிப்புக்கு முன்னரான காலப்பகுதியிலும்,அதற்கு  பின்னரான காலப்பகுதியிலும் ஊடகங்களின் செயற்பாடு அவதானத்துக்குரியவை.

ஒருசில ஊடகவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் தமது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்காகவும், பழிவாங்களுக்காகவும் ஊடகத்துறையை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சமூக ஊடக பாவனையினால் இன்று ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாலியல் துஸ்பிரயோகங்கள், சமூக விரோத செயற்பாடுகள் சமூக ஊடகங்களை அடிப்படையாக கொண்டு இடம்பெறுகின்றன.

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை கண்காணித்து, வினைத்திறனான சேவைகளை முன்னெடுப்பதற்காகவே 'ஒளி மற்றும் ஒலி ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம்' தயாரிக்கப்பட்டது.

எந்த ஊடகத்தையும் இலக்காக கொண்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின்  நெறிமுறைகளுக்கு அமைய இந்த சட்டமூலத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைகளுக்கு அமையவே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டது. இந்த சட்டமூலத்தை அடுத்த ஆண்டு செயற்படுத்த எதிர்பார்த்துள்ளோம். வெற் வரி  உள்ளடக்கத்தில் நூல் பதிப்பு சேர்க்கப்பட்டுள்ளமை தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வின் மூலமே தமிழர்களின்...

2025-01-18 22:11:09
news-image

ராஜபக்ஷக்கள் நாட்டை சீன கடன்பொறிக்குள் தள்ளவில்லை...

2025-01-18 21:56:39
news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை ஏதேனுமொரு பரிமாணத்தில்...

2025-01-18 21:52:14
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கதிரை சின்னத்தில் கூட்டணியாக...

2025-01-18 15:54:49
news-image

இலங்கையின் அனைத்து முயற்சிகளிலும் நிபந்தனையற்ற நண்பனாக...

2025-01-18 18:19:10
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் -...

2025-01-18 21:51:31
news-image

நாடெங்கும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கம்; பொதுமக்கள்...

2025-01-18 17:06:52
news-image

ஆலயங்களை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பேன்...

2025-01-18 21:40:27
news-image

மருந்து உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க...

2025-01-18 15:55:31
news-image

உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால்...

2025-01-18 15:56:17
news-image

புங்குடுதீவில் குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

2025-01-18 18:22:23
news-image

சம்மாந்துறையில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய...

2025-01-18 18:15:19