89ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் வருடத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதானது மூன்லைட்(Moonlight) பதிலாக தவறுதலாக லாலா லேண்ட் (La La Land) திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திரைப்பட கலைஞர்களின் உயரிய விருதான 89 ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடந்து வருகின்றது. குறித்த நிகழ்வில் ஹொலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கு பற்றி வருகின்றனர்.
இந்நிலையில் வருடத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதானது முதலில் லாலா லேண்ட் படத்திற்கு அறிவிக்கப்பட்டு, குறித்த பட குழுவானது கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தொகுப்பாளரினால் வருடத்தின் சிறந்த திரைப்படம் மூன்லைட்(Moonlight) , எனவும் லாலா லேண்ட் தவறுதலாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விருது தொகுப்பாளராக இருந்த ஜிம்மி கீமேல், தான் வழங்கப்பட்டிருந்த சீட்டில் தடுமாறியவாறு அறிவித்துவிட்டதாகவும், பின் விருது அறிவிப்பு அட்டையை கெமரா முன் காட்டி, மூன் லைட்தான் சிறந்த திரைப்படமாக தெரிவாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த ஒஸ்கார் விருது விழாவில், லாலா லேண்ட் படத்திற்கு மொத்தமாக 6 விருதுகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், மூன்று விருதுகளை மாத்திரமே வென்ற மூன் லைட் திரைப்படம் வருடத்தின் சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM