கடும் வெப்பத்தின் பிடியில் அவுஸ்திரேலியா

08 Dec, 2023 | 04:02 PM
image

அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 செல்சியசிற்கும் அதிகமாக காணப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தாஸ்மேனியாவை தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் அதிகளவு வெப்பநிலை காணப்பட்டது.

தென் அவுஸ்திரேலியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுஇமாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பினால் மூண்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலை வார இறுதிவரை தொடரலாம் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

கடும் காற்று மின்னல் கடும் வெப்பம் காரணமாக தென் அவுஸ்திரேலியா கிழக்கு அவுஸ்திரேலியா வடமேற்கு அவுஸ்திரேலியா தென்கிழக்கு நியுசவுத்வேல்ஸ் ஆகிய பகுதிகளில் கடும் தீ ஆபத்துள்ளதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

தென் அவுஸ்திரேலியாவில் வெப்பநிலை 47 செல்சியசாக காணப்பபடுகின்றது.

மாநிலத்தில் கட்டுப்படுத்தமுடியாத காட்டுதீ ஏற்படலாம் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

சில பகுதிகளில் வெப்பம் 47 செல்சியசாக காணப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் அவுஸ்திரேலியாவில் ஆபத்தான தீ நிலையை கட்டுப்படுத்துவதற்கான தீவிரமுயற்சிகள் இடம்பெற்றுவரும அதேவேளை 35000 பேருக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மோசமான காலநிலை காரணமாக 11000 பேர் மின்விநியோகத்தை இழந்துள்ளனர் மேலும் பாதுகாப்பு காரணங்களிற்காக13000 பேருக்கான மின்சாரவிநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது 

தீ ஆபத்து அதிகரித்ததால் பல பகுதிகளில் மின்விநியோகத்தை துண்டிக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48
news-image

காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை...

2025-02-05 10:31:03
news-image

யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அனைவரும் பணி நீக்கம்?

2025-02-05 09:43:19
news-image

காசாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின் கீழ்...

2025-02-05 06:36:32
news-image

ஸ்வீடனில் கல்வி நிலையத்தில் துப்பாக்கிச் சூடு...

2025-02-05 03:14:15
news-image

யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி...

2025-02-04 14:42:03