இலங்கையின் முன்னாள் இராணுவீரர்கள் உக்ரைன் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவதை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளதாக வெளிpவிவகார அமைச்சர் அலி சப்ரி ஐலண்ட் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இலங்கையின் முன்னாள் இராணுவீரர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தினால் எதுவும் செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் படையணியினரோடு இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் இணைந்து செயற்படுவதை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு அவர்கள் ஓய்வுபெற்ற பின்னர் தங்கள் சொந்த விருப்பத்தில் உக்ரைன் சென்றுள்ளனர் இலங்கையர்கள் அனைவருக்கும் நடமாடுவதற்கான சுதந்திரம் உள்ளது மேலும் அவர்கள் அங்கு சென்றதும் இலங்கையால் அவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தாங்கள் தங்கியுள்ள நாட்டின் சட்டங்களை மீறினால் அல்லது இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பின்னர் தலைமறைவானால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனிற்காக போரிட சென்ற முன்னாள் இராணுவவீரர்கள் குறித்த புள்ளிவிபரங்கள் அரசாங்கத்திடம் இல்லை என ஐலண்ட் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM