கினிகத்தேன, தியகல பகுதியில் மண்சரிவு ; பாடசாலை மாணவர்கள் உட்பட பயணிகள் பாதிப்பு

Published By: Digital Desk 3

08 Dec, 2023 | 11:50 AM
image

அட்டன் கொழும்பு ஏ 07 பிரதான வீதியில் கினிகத்தேன தியகல பகுதியில் பிரதான வீதியில் வீழ்ந்த மரத்தையும் மண்மேட்டையும் அகற்றும் பணியை நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை (08) காலை முதல் ஆரம்பித்துள்ளனர்.

கினிகத்தேன பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை  (07) பிற்பகல் பெய்த கடும் மழையுடன் இரவு 7.45 மணியளவில் குறித்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக கொழும்பில் இருந்து அட்டன் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களையும் களுகல, லக்ஷபான,  நோட்டன் பிரிட்ஜ் ஊடாக அட்டன் நோக்கியும், கண்டியிலிருந்து அட்டன் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களையும் நாவலப்பிட்டி -  தலவாக்கலை வீதியின் ஊடாக செல்வதற்கும் கினிகத்தேன பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த மண்சரிவினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமையினால், இன்று வெள்ளிக்கிழமை (08) காலை அட்டன் பகுதியிலுள்ள  பாடசாலைகளுக்கு வரும் மாணவர்கள், அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

பிரதான வீதியில் விழுந்த பெரிய மரம் மற்றும் மண் மேட்டை வெட்டி அகற்றும் பணியை வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆரம்பித்துள்ள  போதிலும், அதனை சீரமைக்க இன்னும் சில மணித்தியாலங்கள் ஆகும் என்பதால் மாற்று வீதிகளில் வாகனங்களை செலுத்துமாறு  கினிகத்தேன பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58