வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் ; அடையாள அணிவகுப்பு இன்று

Published By: Digital Desk 3

08 Dec, 2023 | 10:02 AM
image

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் தொடர்பான வழக்கு நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (08) விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், அடையாள அணிவகுப்பு நடத்தப்படவுள்ளதுடன், பொலிஸ் பொறுப்பதிகாரியின் சாட்சியங்களும் பதிவு செய்யப்படவுள்ளன. 

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார். 

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது. 

குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ள நிலையில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் மன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். 

அதனை தொடர்ந்து அடையாள அணிவகுப்பு நடைபெறும். 

அதேவேளை நவம்பர் மாதம் 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பொறுப்பதிகாரி பதவி வகித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உள்ளிட்ட மூவர் சாட்சியம் அளித்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கில் போதைப்­பொருள் பாவ­னைகள் அதி­க­ரிப்பு :...

2024-04-23 14:30:27
news-image

ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண்...

2024-04-23 14:13:24
news-image

சிவனொளிபாத மலை யாத்திரீகர்களின் செயற்பாட்டால் சுற்றாடல்...

2024-04-23 12:46:53
news-image

தியத்தலாவை கார் பந்தய விபத்து :...

2024-04-23 12:19:27
news-image

வறட்சியான வானிலையால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்...

2024-04-23 14:11:33
news-image

ஏமாற வேண்டாம் ! 8 நிறுவனங்களின்...

2024-04-23 11:58:01
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 720 பெண்கள் உட்பட...

2024-04-23 11:47:46
news-image

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்...

2024-04-23 11:44:57
news-image

இணையவழி மூலம் கடன் பெற்று தருவதாகக்...

2024-04-23 11:50:25
news-image

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் காலமானார்

2024-04-23 10:50:57
news-image

புத்தளம் - குருணாகல் பிரதான வீதியில்...

2024-04-23 10:40:00
news-image

பாக்கு நீரிணையை நீந்தி கடக்க முயன்ற...

2024-04-23 14:18:31