தொழிலுக்காக சென்ற நபர் ஒருவர் வீதியியோரத்தில் அமர்ந்த நிலையில் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொட நகரில்  பதிவாகியுள்ளது.

வட்டகொட - சமன்புற பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய சந்திரதாஸ என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தொழிலுக்கு செல்லும் போதே குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.