(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் பாராளுமன்ற சபை அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சால்வை அணிந்து வந்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) வெளிவவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.
இதன்போது சபைக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பலஸ்தீன் மக்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் கறுப்பு வெள்ளை சால்வை அணிந்து வந்திருந்தார்.
அத்துடன் அவர் இவ்வாறு அணிந்து வந்ததற்கான காரணத்தையும் சபைக்கு தெளிவுபடுத்தினார்.
அதாவது, நான் இந்த சால்வையை அணிந்து வரும்போது லொபியில் இருந்து வடக்கு மக்கள் பிரதிநிதி ஒருவர் என்னை பார்த்து, பலஸ்தீன் மக்களுக்காக மாத்திரமா இதனை அணிகிறீர்கள் என கேட்டார்.
இத்தகைய சால்வை அணிந்தது பாலஸ்தீன மக்களுக்கு மட்டுமல்லாது, உலக அமைதிக்காகவும்தான்.
இனவாதத்தையும் மதவாதத்தையும் எந்த தரப்பினர் அமுல்படுத்தினாலும் அதை வன்மையாக கண்டிக்கிறோம்.
உலகத்தின் நிலையானதன்மை உலக அமைதியிலிருந்தே ஏற்படுகின்றது.
நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இனவாதம், சாதிவாதம், மதவாதம், மதவெறியை எந்த ஒரு குழு நடைமுறைப்படுத்தினாலும் நாங்கள் அதனை கடுமையாக நிராகரிக்கிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM