இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த இருதரப்பு சந்திப்பு

Published By: Vishnu

07 Dec, 2023 | 07:17 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் அழைப்பின் பேரில் நாட்டு வருகை தந்துள்ள ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் பிரதிநிதிகள் குழுவுடன் இந்த கலந்துரையாடல் வியாழக்கிழமை (7) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.

ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் உப செயலாளர் ஓமலே விளாடிமிரோவிச் தலைமையில் ரஷ்யாவின் தூதுக்குழுவினர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியதுடன், இதன்போது இரு நாட்டு பாதுகாப்புகள் மற்றும் இலங்கைக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை  தொடர்ந்தும் பலப்படுத்தவும், அதற்கு ரஷ்யா வழங்கும் ஒத்துழைப்புகள் தொடர்பிலும், மேலும் சர்வதேச தகவல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

இந்த சந்திப்பின் போது நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கும்...

2025-02-16 09:48:30
news-image

புதன்கிழமை இலங்கை வரும் இன விவகாரங்களுக்கான...

2025-02-16 09:42:59
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது கடினம்...

2025-02-16 09:22:20
news-image

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் விரைவில் மீட்கப்படுவர்...

2025-02-16 09:13:12
news-image

அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்...

2025-02-16 09:11:44
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை...

2025-02-15 17:53:42
news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த...

2025-02-15 17:54:48
news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44