பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை பாராளுமன்றக் குழு கூட்டங்களுக்கு  செல்ல அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (27) பிறப்பித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பாராளுமன்றக் குழு கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த  ஆட்சி காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில், இவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது