புலிகள் பற்றி பேச சாணக்கியனுக்கு உரிமையில்லை - சாமர சம்பத்

07 Dec, 2023 | 05:37 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி பேசுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 9 எம்.பிக்களுக்கு மாத்திரமே உரிமையுண்டு. சாணக்கியனுக்கு உரிமையில்லை. ஏனெனில், அவரது செயற்பாடுகளும் உறவுகளும் சிங்களவர்களுடன் தொடர்புபட்டுள்ளது. இவர் சிங்கள பெண்ணை மணக்கவுள்ளார் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (07) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம் தம்மை புலி என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டார்.

இதனை சுட்டிக்காட்டி உரையாற்றுகையிலேயே சாமர சம்பத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:

சபையில் பேசிய சாணக்கியன் "நான் ஏதாவது கூறினால் என்னை புலி என்று கூறுவீர்கள்'' என்று குறிப்பிட்டார். அவருக்கும் புலிகளுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது.

மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக இருந்தபோது அவரிடம் போய் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக பதவி பெற்றார். ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டார். 

அது மட்டுமல்ல, இவர் கண்டியில் உள்ள சிங்கள பாடசாலையில் தான் கல்வி கற்றார். சிங்கள வீடுகளில்தான் உணவருந்தினார். சிங்களப் பெண்கள்தான் அவரின் தோழிகள். அவர் ஒரு சிங்களப் பெண்ணைத்தான் திருமணமும் செய்யவுள்ளார்.

எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள ஒன்பது உறுப்பினர்களுக்கு மட்டுமே புலிகள் பற்றி பேச உரிமையுண்டு. ஏனெனில், அவர்கள் புலிகளுடன் இருந்தவர்கள், வாழ்ந்தார்கள்.

ஆனால், சாணக்கியனுக்கு தன்னை புலி என்று கூற எந்த தகுதியும் உரிமையும் கிடையாது என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள்...

2025-01-20 23:08:29
news-image

இந்திய அபிவிருத்தி திட்டங்கள் எமது ஆட்சியிலேயே...

2025-01-20 23:14:03
news-image

மக்கள் செல்வாக்கை மதிப்பீடு செய்வதற்காகவே அநாவசிய...

2025-01-20 15:13:19
news-image

போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கான மருத்துவ...

2025-01-20 23:15:45
news-image

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசியல்...

2025-01-20 16:04:19
news-image

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நான்கு...

2025-01-20 22:16:47
news-image

ஓடும் ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து

2025-01-20 21:22:53
news-image

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர்...

2025-01-20 20:33:04
news-image

ஊடகத்துறையின் அபிவிருத்திக்காக ஊடக நிறுவனமொன்று நிறுவப்படும்...

2025-01-20 16:25:38
news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற...

2025-01-20 19:04:54
news-image

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவனின் மறைவுக்கு...

2025-01-20 23:15:14
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

2025-01-20 17:25:36