(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய மாற்றீடு ஒன்று உருவாக்கப்படும் வரை பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது என சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மீறி விட்டது.
வாக்குறுதியை மீறி விட்டு புதிய வாக்குறுதிகளை வழங்கும் போது சர்வதேசம் நம்பிக்கை கொள்ளாது. இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் தலையிடும் சூழலை நல்லாட்சி அரசாங்கமே உருவாக்கியது என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டின் வெளிவிவகார கொள்கையின் தன்மையை வெளிவிவகாரத்துறை அமைச்சர் எடுத்துரைத்தார். எவருக்கும் அடிபணிய போவதில்லை,நாட்டின் உள்ளக விவகாரங்களில் வெளியாட்கள் தலையிட அனுமதிக்க போவதில்லை என்று குறிப்பிட்டார்.இதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்.2012,2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நான் வெளிவிவகாரத்துறை அமைச்சராக பதவி வகித்தேன்.இந்த நிலைப்பாட்டிலேயே நானும் இருந்தேன்.
பிளவுப்படாத வெளிவிவகார கொள்கையின் உறுதிப்பாட்டை ஐக்கிய நாடுகள் சபையிடம் எடுத்துரைத்தோம்.ஐக்கிய நாடுகள் சபையில் சகல நாடுகளுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும்.மதிக்கப்பட வேண்டும்.ஆகவே இலங்கை விவகாரத்தில் மாற்றுக் கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டாம் என்பதை நான் ஐக்கிய நாடுகள் சபையிடம் பலமுறை வலியுறுத்தினேன்.
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சர்வதேசம் தலையிடும் சூழலை நல்லாட்சி அரசாங்கமே உருவாக்கியது.இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு இணையனுசரனை வழங்குவதாக இலங்கை இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து இலங்கை தொடர்பில் தகவல் திரட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட பொறிமுறையை உருவாக்கியது.அந்த பொறிமுறை தற்போது செயற்படுகிறது.
இணையனுசரனை வழங்கும் இணக்கப்பாட்டை மீளப்பெற்றுக் கொள்வதாக இலங்கை தற்போது குறிப்பிடுவது சாத்தியமற்றது.அரசியல் நோக்கத்துக்காக அன்று எடுத்த தீர்மானம் இன்று முழு நாட்டுக்கும் எதிர்வினையாக காணப்படுகிறது.எந்த அரசாங்கமும் நிலைத்து நிற்காது.ஆனால் அரசாங்கம் எடுக்கும் தவறான தீர்மானங்கள் நிலைத்திருந்து தாக்கம் செலுத்தும்.
பயங்கரவாத தடைச்சட்டம் தற்போது பிரதான பேசுபொருளாக உள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தம் செய்யப்படும் வரை பயங்கரவாத தடைச்சட்டத்துடனான கைதுகள் இடம்பெறாது என முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்கினார்.வெளிவிவகாரத்துறை அமைச்சராக நான் அந்த வாக்குறுதியை உறுதிப்படுத்தினேன்.
சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மீறியுள்ளது. அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள்.இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
சர்வதேசத்துடன் இணக்கமாக செயற்படுகிறோம் என்று பேச்சளவில் குறிப்பிடுவதால் மாத்திரம் முன்னேற்றமடைய முடியாது.வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். வாக்குறுதியை மீறி விட்டு புதிதாக வாக்குறுதிகள் வழங்கும் போது சர்வதேசம் நம்பிக்கை கொள்ளாது.ஊடகங்கள் மீதான அடக்குமுறையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM