டுபாயில் இடம்பெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் நேற்றைய தினம் காலிறுதிக்கு தகுதிபெறும் போட்டியில்   இஸ்லாமாபாத் யுனைட்டன் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியின் ஆரம்பத்தில் மழைக்குறுக்கிட்டதால் அணிக்கு 15 ஓவர்களாக ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டது.

இதனடிப்படையில் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  இஸ்லாமாபாத் அணி 15 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுளை இழந்து 123 ஓட்டங்களை பெற்றது.

இஸ்லாமாபாத் அணி சார்பில்  ஸ்மித் 49  ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

124 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கராச்சி அணி 14.5 ஓவர்களில் கிரிஸ் கெயிலின் அதிரடியூடாக  வெற்றியை பதிவுசெய்து காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

கராச்சி அணி சார்பாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய கிரிஸ் கெயில்  17 பந்துகளில் 5 ஆறு ஓட்டங்கள் மற்றும் 2 நான்கு ஓட்டங்கள்  அடங்கலாக  44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதேவேளை போட்டியின் சிறப்பாட்டக்காரராக கெயில் தெரிவுசெய்யப்பட்டார்.