தந்தையை தேடிச் சென்ற மகன் மழை நீரில் மூழ்கி பலி ; 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு!

07 Dec, 2023 | 12:31 PM
image

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் தந்தையை தேட சென்ற மகன் மழை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிக்ஜாம் புயலால் சென்னையில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த மழையால் பெரும்பாலான இடங்கள் நீரில் மூழ்கின.  சென்னையின் போரூர்,  காரப்பாக்கம், மணப்பாக்கம்,  முகலிவாக்கம்,  வேளச்சேரி,  மேடவாக்கம்,  மடிப்பாக்கம்,  பள்ளிக்கரணை, முடிச்சூர்,  மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவு முதல் 15 அடி வரை வெள்ள நீர் சூழ்ந்தது.

சில பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது.  மக்கள் உள்ளேயே சிக்கி இருக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.  பல இடங்களில் 40 மணி நேரமாக மின்சாரம் இல்லை. குடிநீர் இல்லை.  மக்கள் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஒரு பக்கம் அரசின் மீட்பு பணிகள் நடக்க இன்னொரு பக்கம் தன்னார்வலர்களும் மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.  இந்நிலையில்,  சென்னை பள்ளிகரணையில் தந்தையை தேடிச் சென்ற மகன் மழைநீரில் மூழ்கி 3 நாட்கள் கழித்து உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.  தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் உதவியுடன் உடலை மீட்டனர். இந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

80 வருடங்களிற்கு முன்னர் தாய்லாந்திலிருந்து மியன்மாருக்கு...

2025-02-16 11:18:34
news-image

டெல்லி புகையிரத நிலையத்தில் கூட்ட நெரிசலில்...

2025-02-16 07:20:57
news-image

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கானின் அறிவிப்பு

2025-02-15 13:04:33
news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40
news-image

உடல்நலப்பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

2025-02-14 16:24:16
news-image

புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் -...

2025-02-14 15:11:08
news-image

செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம்...

2025-02-14 14:31:15
news-image

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னரும் ஜேர்மனி நாடு...

2025-02-14 13:13:29
news-image

உக்ரைன் யுத்தம் குறித்து இன்று முக்கிய...

2025-02-14 12:22:29
news-image

ட்ரம்பை சந்தித்த இந்திய பிரதமர் .....

2025-02-14 11:07:20
news-image

ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரால் மோதிய...

2025-02-14 07:41:47
news-image

தாய்வானில் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவம்...

2025-02-13 15:32:35