வெள்ளத்தில் சிக்கித் தவித்த தம்மை காப்பாற்றிய மீட்பு குழுவினருக்கு நன்றி தெரிவித்த நடிகை கனிகா

07 Dec, 2023 | 12:11 PM
image

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த தொடர் கனமழையால் சென்னை நகரின் வேளச்சேரி, பெருங்குடி, பள்ளிகரனை, முடிச்சூர், கூடுவாஞ்சேரி, மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சில இடங்கள் வழமைக்கு திரும்பினாலும், தாழ்வான பகுதிகள் இன்னும் தண்ணீரில் இருக்கின்றன.

இதனால், வெள்ளத்தில் மூழ்கியுள்ள பகுதிகளில் குடியிருப்பவர்கள் வெளியே செல்ல முடியாமல் இருப்பவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை கனிகா சென்னையில் தனது குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் வெளியேற முடியாமல் தவித்ததாகவும் மீட்புக் குழுவினர் வந்து மீட்டதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். 

தனது குடியிருப்பு பகுதியைச் சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நடிகை கனிகா,

“நாங்கள் மீட்கப்பட்டோம், குடிநீர் விநியோகம் இல்லை, மின்சாரம் இல்லை. வெள்ள நீரின் அளவு அதிகரித்துக்கொண்டே இருந்ததால் எங்களுக்கு வேறு வழி இல்லை. மீட்புக் குழுவினருக்கும் அவர்களின் முயற்சிக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். 

அத்துடன், அவர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 150க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உத்தரப் பிரதேசத்தில்குளத்தில் டிராக்டர் விழுந்து விபத்து:...

2024-02-24 15:46:03
news-image

240 மில்லியன் ஆண்டுகள் பழமையான ட்ரேகன்...

2024-02-24 18:08:01
news-image

அலெக்ஸி நவால்னியின் மரணம் - ரஸ்ய...

2024-02-24 12:48:30
news-image

'தமிழக மீனவர்களுக்கு சிறைத் தண்டனையா?' -...

2024-02-24 09:43:06
news-image

‘சீதா’, ‘அக்பர்’ சர்ச்சை முடிவுக்கு வந்தது

2024-02-24 09:34:49
news-image

ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் உடலை இரகசிய...

2024-02-23 10:41:56
news-image

நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய தனியார்...

2024-02-23 10:45:52
news-image

மணிப்பூர் வன்முறைக்கு வித்திட்ட சர்ச்சை தீர்ப்பை...

2024-02-23 09:52:02
news-image

ஸ்பெயினில் வலென்சியா நகரில் தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய...

2024-02-23 05:53:23
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேலிய படையினரை விலக்குமாறு...

2024-02-22 17:11:14
news-image

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு சிறை: மத்திய...

2024-02-22 16:57:57
news-image

டெல்லி போராட்டக்களத்தில் மேலும் ஒரு விவசாயி...

2024-02-22 11:26:32