அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவே வடக்கு,கிழக்கு இனவாத முரண்பாடுகளுக்கு கதாநாயகன் - சாணக்கியன் கடும் சாடல்

Published By: Vishnu

07 Dec, 2023 | 10:58 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் கடும் இனவாதி தமிழர் மரபுரிமைகளை அழிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளார்.தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்தை பதவி விலக்கியதற்கு பதிலாக ஜனாதிபதி இவரை பதவி விலக்கியிருக்க வேண்டும்.ஆனால் ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை.வடக்கு மற்றும் கிழக்கில் இனவாத முரண்பாடுகளுக்கு இவரே கதாநாயகன் என தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற  2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு, புத்தசாசனம்,சமய மற்றும் கலாசார அலுவல்கள்    அமைச்சின்   செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு மிக முக்கியமானது.இருப்பினும் இந்த  அமைச்சு பற்றி பேசுவது பயனில்லை.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்துக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கில்  இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட இவர் புத்தசாசன அமைச்சராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.இவர் கடும் இனவாதி.மலைகளை கண்டால் அவரால் இருக்க முடியாது. அங்கு ஓடிச் செல்வார். வெடுக்குநாறி மலை குருந்தூர் மலைக்கு ஓடி வந்தார். இனவாத முரண்பாடுகளை தோற்றுவித்தார். மட்டக்களப்பு மாவட்ட குசலான மலைக்கும் வந்தார். ஆனால் நாங்கள் அவரை அங்கு செல்லவிடவில்லை. ஒரு கிலோமீற்றர் தூரம் நடக்க வைத்து வழியனுப்பி வைத்தோம்.

இனவாத செயற்பாடுகளுக்காகவே புத்தசாசனம் அமைச்சும், தொல்பொருள் திணைக்களமும் பயன்படுத்தப்படுகிறது. தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளரை ஜனாதிபதி அண்மையில் பதவி விலக்கினார்.உண்மையில் இனவாத முரண்பாடுகளின் கதாநாயகனாக உள்ள புத்தசாசன அமைச்சரை அவர் பதவி நீக்கியிருக்க வேண்டும்.இவரை பதவி நீக்க தைரியம் இல்லாமல் பணிப்பாளர் நாயகத்தை பதவி நீக்கினார்.

ஜனாதிபதியுடன் பேசி பயனில்லை என்பதற்காக தற்போது சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.இனவாதியான புத்தசாசன அமைச்சர் நீதிமன்ற கட்டளைக்கு புறம்பாக இராணுவத்துடன் நெடுக்குநாறிக்கு வருகை தந்தார்.ஆகவே இவருக்கு எதிராக எதிர்காலத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.இந்த கடும் இனவாதி அமைச்சரினால் தான் நீதிபதி ஒருவர் நாட்டை விட்டு வெளியேறினார்.எதிர்காலத்தில் நிச்சயம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு...

2024-11-10 13:28:59
news-image

கொழும்பில் ஆடம்பர தொடர்மாடியில் 'முதலீட்டு மோசடி"...

2024-11-10 13:19:50
news-image

சுன்னாகத்தில் பொலிஸாரினால் தாக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க...

2024-11-10 13:07:00
news-image

பதுளை - மஹியங்கனை வீதியில் பயணித்த...

2024-11-10 12:47:01
news-image

தமிழ்நாட்டின் மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து நெடுந்தீவை...

2024-11-10 12:26:29
news-image

ஓட்டமாவடியில் லொறி - மோட்டார் சைக்கிள்...

2024-11-10 11:53:59
news-image

வென்னப்புவ துப்பாக்கிச் சூடு தொடர்பில் இருவர்...

2024-11-10 12:14:53
news-image

ஒருமாத காலத்துக்குள்ளேயே அநுர அரசாங்கம் சறுக்க...

2024-11-10 13:36:32
news-image

மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் கொலை ;...

2024-11-10 11:12:15
news-image

லசந்த, தாஜூதீன் கொலைகளுக்கு நீதி வழங்கப்படும்...

2024-11-10 10:57:33
news-image

இலங்கையும் இந்தியாவும் வரலாற்று நாகரிகத்தின் இரட்டையர்கள்...

2024-11-10 10:51:16
news-image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் தாயும் மகளும்...

2024-11-10 10:37:37