89ஆவது சர்வதேச ஒஸ்கார் விருது வழங்கள் விழாவில், ஹொங்கொங் நடிகரான  ஜக்கிஜானிற்கு கௌரவ ஒஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. 

திரைப்பட கலைஞர்களின் உயரிய விருதான 89 ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்று வருகின்றது. குறித்த நிகழ்வில் ஹொலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கு பற்றி வருகின்றனர்.

குறித்த ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் 1960 ஆண்டு முதல் கலைத்துறை பணியில்  ஈடுப்பற்று வருகின்றமைக்காக கௌரவ ஒஸ்கார் விருதினை, ஹொங்கொங் நடிகர் ஜாக்கிஜான் பெற்றுக் கொண்டார்.

சினிமாத்துறையில் 50 ஆண்டுகள் செயற்பட்டு வருகின்றார். மேலும் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளதோடு, இயக்குநர், சண்டைப்பயிற்சி இயக்குநர், தயாரிப்பாளர், தற்காப்பு கலை நிபுணர் மற்றும் பாடகர் என பல்வேறு துறைகளில் அதிக ஈடுபாடுடையவராக செயற்பட்டுள்ளார்.

மேலும் குறித்த ஒஸ்கார் விருது விழாவில் 24 பிரிவுகளிள் விருதுகள் வழங்கப்படுவதோடு, நூற்றுக்கணக்கான திரை பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது