வவுனியா நகரை அண்டிய பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களின் ஒன்று கூடலின் போது பாடசாலைக்கு முன்பாக வீதியில் நின்றவர்களுடன் பாடசாலை மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் நேற்று புதன்கிழமை (06) தெரிவித்தனர்.
வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களுக்கான ஒன்று கூடல் நேற்றைய தினம் மதியம் இடம்பெற்றது. இதன்போது உயர்தர மாணவர்கள் சொகுசு கார்கள் மற்றும் அதியுயர் வேகம் கொண்ட மோட்டர் சைக்கிள்கள் என்பவற்றுடன் பாடசாலைக்கு வருகை தந்ததுடன், பாடசாலை முன்பாக அவற்றை செலுத்தி போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தினர்.
இதன்போது பாடசாலையில் ஏனைய வகுப்பு மாணவர்களை ஏற்ற வந்த பெற்றோர் ஒருவருடன் விபத்து ஏற்பட்டதையடுத்து, பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு அப்பகுதியில் இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து அப் பகுதியில் பொலிஸார் வருகை தந்து நிலமையை கட்டுப்படுத்தினர்.
குறித்த சம்பவத்தின் போது, பாடசாலை வளாகத்தற்குள் இருந்து வருகை தந்து உயர்தர மாணவர்கள் பல தடவைகள் பெற்றோருடன் முரண்பட்ட போதும், பாடசாலை நிர்வாகம் மற்றும் கடமையில் இருந்த பதில் அதிபர், பழைய மாணவர் சங்கத்தினர் ஆகியோர் ஆக்கபூர்வமான நடவடிக்கைளை எடுக்கவில்லை எனவும், நிலமையை கட்டுப்படுத்தவில்லை எனவும் அப் பாடசாலையின் பெற்றோர்களும், பாடசாலை சமூகமும் குற்றம் சாட்டியுள்ளது.
குறித்த மாணவர்கள் பின்னர் குறித்த சொகுசுகார்கள் மற்றும் மோட்டர் சைக்கிள்களில் பயணித்து வைவரவபுளியங்குளம் பகுதியிலும் பொது போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி குழப்பம் விளைவித்தாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM