(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் புத்தசாசன,சமய ,கலாசார அலுவல்கள் அமைச்சின் தொல்பொருள் திணைக்களத்துள்ளான நிதி ஒதுக்கீடு 39 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
ஆதரவாக 44 வாக்குகளும், எதிராக 05 வாக்குகளும் அளிக்கப்பட்டன.175 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளவில்லை.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் புத்தசாசனம் மற்றும் சமய,கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.
விவாத முடிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொல்பொருள் திணைக்களத்துக்கான நிதி ஒதுக்கீடு மீது வாக்கெடுப்பைக் கோரினார்.
இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் பாதுகாப்பு அமைசுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 44 வாக்குகளும் எதிராக 05 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 39 மேலதிக வாக்குகளினால் ஒதுக்கீடு நிறை வேற்றப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக அரச தரப்பினர் வாக்களித்திருந்த நிலையில்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வராசா கஜேந்திரன்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம்,எம்.ஏ.சுமந்திரன்,சிறிதரன், ஆகியோர் வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும்,மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துக் கொள்ளவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM