(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சஜித் பிரேமதாச அமைச்சராக மத்திய கவாசார நியத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஆளும் கட்சி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த குற்றச்சாட்டால் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
அத்துடன் தனது மனைவிக்கு பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்து அவர்களுக்கு அரசாங்கத்தினால் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினால் பதவி விலகுவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் சவால் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு மற்றும் புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில், ஆளும் கட்சி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தனது உரையின்போது, சஜித் பிரேமதாச கலாசார அமைச்சராக இருந்தபோது மத்துய கலாசார நிதியத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் மேற்கொண்ட பணிகளுக்கு கலாசார நிதியத்தின் நிர்வாக சபையின் அனுமதி பெறப்படவில்லை என்றார்.
அதற்கு சஜித் பிரேமதாச பதிலளிக்கையில், கலாசார நிதியத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து நியத்துக்கும் நிர்வாக சபையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இதுதொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட வசந்த ஜினதாச குழுவின் அறி்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வசந்த ஜினதாச அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். உண்மைகள் வெளிப்படும் என்ற காரணத்தினாலேயே அதனை வெளிப்படுத்தாமல் இருக்கின்றனர் என்றார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி குறிப்பிடுகையில், மத்திய கலாசார நிதியத்தை பயன்படுத்திக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தின் திருத்தப்பணிகளுக்கு நிதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று சஜித் பிரேமதாசவின் மனைவிக்கு 10 பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு அரசாங்கத்தினால் சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளிக்கையில், கணக்காய்வு அறிக்கையை சபைக்கு சமர்ப்பியுங்கள் அவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தால் நான் உடனடியாக பதவி விலகுவேன் என்றார். இதன்போது மஹிந்தானந்த எம்.பி. தனது கையில் இருந்த ஆவணத்தை காட்டி இதோ அமைச்சின் உள்ளக கணக்காய்வு அறிக்கை இருக்கிறது. இதனை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். நீங்கள் தெரிவித்ததுபோல் தற்போது உடனடியாக பதவி விலகவேண்டும் என்றார்.
குறித்த ஆவணத்தை பார்த்துவிட்டு சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், 2022இல் இவர்களின் கையாட்களை நியமித்து எனக்கு சேறு பூச பொய் அறிக்கை தயாரித்திருக்கிறார்கள்.மஹிந்தானந்த எம்.பி. கையளித்த அறிக்கை தேசிய கணக்காய்வு நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை அல்ல என்றார்.
அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக தெளிவுபடுத்த அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோது, சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்ததால் அவரால் கதைக்க முடியாமல் பல தடவைகள் இடையூறு ஏற்பட்டது. இறுதியாக அவர் தெளிவுபடுத்துகையில், கலாசார நிதியத்தின் மூலம் 2019 வேலைகளுக்கு அனுமதி கோரப்பட்டிருக்கிறது. என்றாலும் அனுமதி கிடைக்கப்பெறவில்லை என்றார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி, கணக்காய்வு திணைக்களத்தின் உள்ள விசாரணை அறிக்கையிலேயே சஜித் பிரேமதாச தனது மனைவிக்கு 16 பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்ததுபோல் பதவி விலகவேண்டும் என தெரிவித்து அவர் சபையில் இருந்து சென்றார். அதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கை சுமுகமாக இடம்பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM