முளைகட்டிய தானியங்களை சாப்பிடுபவர்களா நீங்கள்.? இதோ உங்களுக்காக..!

06 Dec, 2023 | 08:20 PM
image

முளைகட்டிய தானியங்கள் தரவல்ல நன்மைகள் குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் அதிகரித்துவருவதால், தற்போது பலரும் அந்த பாரம்பரிய உணவை நாட ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான விடயம். 

அதேநேரம், முளைகட்டிய தானியங்களை பச்சையாக சாப்பிடுவதால், ஆரோக்கிய நன்மைகள் முழுவதுமாக பெற முடியாது எனவும், வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும் எனவும் சில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலர், முளைகட்டிய தானியங்களை அதிகம் உணவில் சேர்க்கின்றனர். முளைகட்டிய தானியங்களில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை நிறைந்துள்ளன. 

பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை நீரில் நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊறவைத்து முளைக்கச் செய்து சாப்பிடலாம். 

குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், செரிமான அமைப்பு பலவீனமாக இருப்பவர்கள் முளைகட்டிய தானியங்களை பச்சையாக சாப்பிடக்கூடாது. அவர்கள் முளைகட்டிய தானியங்களை சிறிது எண்ணெய், இஞ்சி போன்றவற்றை சேர்த்து வேகவைத்துச் சாப்பிடுவது பரிந்துரைக்கத்தக்கது.  

முளைகட்டிய தானியங்களில் பல வகையான சத்துக்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அவற்றை பச்சையாக சாப்பிடும்போது உடலுக்கு ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும், அதன் காரணமாக வாயு மற்றும் அமிலத்தன்மை ஏற்படும்.

இதன் காரணமாக முளைகளை பச்சையாக அல்லாமல் சிறிது நேரம் சமைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அனைத்து சத்துக்களும் உடலுக்கு நன்றாக சென்றடையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிலிகோசிஸ் எனும் நாட்பட்ட நுரையீரல் பாதிப்பிற்குரிய...

2024-02-22 17:04:44
news-image

டெர்மடோமயோசிடிஸ் எனும் தசை வீக்க பாதிப்பிற்குரிய...

2024-02-20 16:54:31
news-image

தீவிர ஒவ்வாமை பாதிப்புக்குரிய நவீன சிகிச்சை

2024-02-19 18:58:31
news-image

மென்திசு சர்கோமா புற்றுநோய் பாதிப்புக்குரிய நவீன...

2024-02-17 17:36:29
news-image

பிரைமரி பிலியரி கோலாங்கிடிஸ் எனும் கல்லீரல்...

2024-02-17 16:39:47
news-image

செரிபிரல் வெனஸ் த்ராம்போஸிஸ் எனும் பெரு...

2024-02-16 20:22:59
news-image

தட்டணுக்களின் எண்ணிக்கை குறைபாட்டிற்குரிய நவீன சிகிச்சை

2024-02-14 16:15:29
news-image

லிம்பெடிமா எனும் நிணநீர் மண்டல பாதிப்பிற்குரிய...

2024-02-13 16:55:56
news-image

புற்று நோய்க்கு நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை...

2024-02-12 16:40:05
news-image

நியூரோஎண்டோகிரைன் கட்டிகளுக்கு நிவாரணமளிக்கும் சிகிச்சை

2024-02-09 16:49:44
news-image

குருதியிலுள்ள வெள்ளையணுக்களின் செயல்பாட்டுத் திறன் குறைபாட்டுக்குரிய...

2024-02-08 16:27:55
news-image

நச்சு எபிடெர்மல் நெக்ரோலிசிஸ் எனும் தோல்...

2024-02-07 17:28:24