ராணா டகுபதி தம்பியின் திருமணம் இலங்கையில்!

06 Dec, 2023 | 08:20 PM
image

தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் தம்பி அபிராமின் திருமணம் இலங்கை - களுத்துறை உள்ள ரிசார்ட் ஒன்றில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

ராணா டகுபதி 2010இல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் இவரை புகழின் உச்சத்திற்குக் கொண்டு நிறுத்தியது. அவரது தம்பியே அபிராம். இவர்,'அஹிம்சா' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அவரது திருமணத்திற்கு ராணா, மனைவி மிஹீகா, நாக சைதன்யா, வெங்கடேஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் என இரு தரப்பிலும் 200 பேர் வரை இலங்கை வந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இலங்கையில் இன்றிரவு திருமணம் முடிந்த பின்னர், அடுத்த சில நாட்களில் மணமக்கள் ஐதராபாத் திரும்பியதும் ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right