இறந்த நிலையில் மூன்று கடலாமைகள் மீட்பு

06 Dec, 2023 | 08:22 PM
image

இரத்மலானை, வெடிகந்த, விஹார மாவத்தை கடற்கரையில்   மூன்று கடலாமைகள் உயிரிழந்த நிலையில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால்  மீட்கப்பட்டுள்ளன. 

புதன்கிழமை (06) குறித்த பகுதியில் வாழும் பிரதேசவாசிகள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள  அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த கடலாமைகள் மீட்கப்பட்டுள்ளன. 

மீட்கப்பட்ட கடலாமைகள் 50, 40, 30 கிலோ எடையுள்ள கொண்டுள்ளதாகவும் இவை முட்டையிடுவதற்காக கடற்கரைக்கு வந்த போது ஆழ்கடலில் இறந்திருக்கலாம் எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் .  

இந்த மூன்று கடலாமைகளும் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட  பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக பெல்லன்வில அத்திடிய வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை தமிழர்கள் இருவரை நாடு கடத்திய...

2024-02-24 18:32:34
news-image

உத்தேச தேர்தல்களில் வெற்றி வாகை சூடுவோம்...

2024-02-24 18:10:46
news-image

வீரமிக்க பெண்களை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு...

2024-02-24 17:54:20
news-image

இந்திய மீனவர்களின் நியாயப்படுத்தலை ஏற்க முடியாது...

2024-02-24 18:22:57
news-image

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்:...

2024-02-24 17:16:25
news-image

“நாட்டிற்கான ஒன்றுபட்ட நடவடிக்கை" ஐக்கிய குடியரசு...

2024-02-24 15:53:29
news-image

சர்ச்சைக்குரிய வெள்ளையானவர்களிற்கான களியாட்ட நிகழ்வு இரத்து...

2024-02-24 15:41:55
news-image

இந்திய - இலங்கை கடல் எல்லையில்...

2024-02-24 15:21:40
news-image

ஐஸ் போதைப்பொருள் பாவனை: பொலிஸ் கான்ஸ்டபிள்...

2024-02-24 15:45:47
news-image

குருணாகல் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக மாற்று...

2024-02-24 15:08:00
news-image

உக்குவாவின் கொலையுடன் தொடர்புடைய இராணுவ வீரர்...

2024-02-24 14:32:09
news-image

கழிவுத் தேயிலையை வீட்டுக்கு எடுத்து செல்ல...

2024-02-24 13:37:39