(எம்.மனோசித்ரா)
உலக வங்கியால் நிதியனுசரணை வழங்கப்படும் நிதித்துறையின் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதித்துறையின் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தும் கருத்திட்டம் உலக வங்கியின் நிதியனுசரணையின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்காக 2023.04.24 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அங்கீகாரத்தின் பிரகாரம் இடம்பெற்ற கடன் உடன்பாட்டுக் கலந்துரையாடல்களில் இலங்கை பணவைப்புக் காப்புறுதித் திட்டம் மூலதனமிடல், மத்திய வங்கியின் நிறுவன ரீதியான இயலளவு விருத்தி மற்றும் குறித்த கருத்திட்ட அமுலாக்கலைக் கண்காணித்தல் போன்ற கூறுகளின் கீழ் 150 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஏற்புடைய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM