குழந்தைகளுக்கான போஷாக்கு உணவுகளுக்கு வரி அறிவிடுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஹர்ஷ டி சில்வா

Published By: Vishnu

06 Dec, 2023 | 08:32 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

குழந்தைகளுக்கான போஷாக்கு உணவுகள் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளமை  அரசின் மிகவும் அசாதாரண செயல். இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

வரி வருமானம் அத்தியாவசியம் என்று அரசு கூறுகின்றது. ஆனாலும் வரி அறவிடும் முறையில் சாதாரணத் தன்மை ஒன்று இருக்க வேண்டும் என்று நாங்கள் கூறினோம்.

குறிப்பாக குழந்தைகளின் போஷாக்கிற்கு தேவையான உணவு வகைகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.உரங்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. டீசலுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. 

அடுத்ததாக மருத்துவ பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவமனைகளுக்கு பொருட்கள் கொண்டு வரப்படும் போது அதற்கான முழு செலவையும் அரசாங்கம் ஏற்கும்.

தற்போது தனியார் மருத்துவனைகளுக்கு பணக்காரர், ஏழைகள் என அனைவரும் செல்கின்றார்கள்.ஏனெனில் மருத்துவ உபகரணங்கள் இல்லாமையால் அரச மருத்துவமனைகளில் அதிகமான மருத்துவ பரிசோதனைகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.ஆகவே தனியார் மருத்துவமனைகளிலேயே பரிசோதனைகளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் குழந்தைகளுக்கான போஷாக்குணவுகள் மற்றும் மருத்துவப்பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளமை  அரசின் மிகவும் அசாதாரண செயலாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1,000 வேன்களையும் கார்களையும் இறக்குமதி செய்ய...

2024-02-23 11:39:44
news-image

இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம்...

2024-02-23 11:38:08
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்...

2024-02-23 11:29:33
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2024-02-23 11:34:47
news-image

யாழ். நல்லூரில் விபத்து - ஒருவர்...

2024-02-23 11:06:48
news-image

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 1,500 சிறுவர்கள்...

2024-02-23 10:52:06
news-image

எல்ல மலையில் ஏறிய 22 வயது...

2024-02-23 10:48:26
news-image

இலங்கையின் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஆதரவளிக்கும்...

2024-02-23 10:26:20
news-image

யுக்திய நடவடிக்கையின்போது மேலும் 729 பேர்...

2024-02-23 10:26:33
news-image

இலங்கை இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறவேண்டும்...

2024-02-23 10:28:46
news-image

போதை மாத்திரைகள் அடங்கிய 671 பொதிகளுடன்...

2024-02-23 10:28:12
news-image

கொலை முயற்சிக்கு உதவிய இருவர் கைது!

2024-02-23 10:22:53