ஸ்பா நிலையங்கள் திறந்த விபச்சார மையங்கள் : கறுப்பு பொருளாதாரம் தீவிரமடைந்துள்ளது - சம்பிக்க ரணவக்க

06 Dec, 2023 | 08:42 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பத்தரமுல்ல, மஹரகம மற்றும் பன்னிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் ஸ்பா (மசாஜ்) நிலையங்கள்  அதிகளவில் உருவாக்கப்பட்டுள்ளன. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தொழில்வாய்ப்புக்களை இழந்த சகோதரிகள் இதில் உள்ளார்கள். ஸ்பா நிலையங்கள் திறந்த விபச்சார மத்திய நிலையம் என்பதை அனைவரும் அறிவார்கள். வங்குரோத்துக்கு மத்தியில் நாட்டில் கறுப்பு பொருளாதாரம் தீவிரமடைந்துள்ளது என ஐக்கிய மக்கள் குடியரசு கட்சியின்  தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) இடம்பெற்ற  2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு, புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள்  அமைச்சின்  செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில்  2022.04.12 ஆம் திகதி வங்குரோத்து நிலை அறிவிக்கப்பட்டதால் இலங்கை சுயாதீனத்தன்மையை இழந்துள்ளது. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொருளாதார பாதிப்பினால் தனிநபர் ஒருவர் 83 ஆயிரம் ரூபாவை இழந்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் ஊடாக  2000 பில்லியன் ரூபா வரி வருமானத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளது. அதே போல் அடுத்த ஆண்டு தனி நபர் ஒருவர் 1 இலட்சம் ரூபாவை இழப்பதுடன், அவரிடமிருந்து 1 இலட்சம் ரூபா வரி வருமானத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வரி கொள்கையினால் மக்கள் இரு முனைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பொருளாதார ஒடுக்கு நிலைக்கு மத்தியில் நாட்டில் கறுப்பு பொருளாதார நிலைமை தோற்றம் பெற்றுள்ளது. இரவு பொருளாதாரத்தை  அமுல்படுத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் குறிப்பிடும் தரப்பினர்கள் பெண் உரிமைகள் பற்றியும் பேசுகிறார்கள்.

பத்தரமுல்லை, மஹரகம மற்றும் பன்னிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் தற்போது ஸ்பா (மசாஜ் நிலையங்கள்) புதிதாக தோற்றம் பெற்றுள்ளன. இதற்கு யார் அனுமதி கொடுத்தது. பொருளாதார பாதிப்பினால் அரச மற்றும் தனியார் தரப்பில் இருந்து நீக்கப்பட்ட எமது சகோதரிகள் இந்த நிலையங்களில் சேவையில் உள்ளார்கள். ஸ்பாக்கல் ' திறந்த விபசார மத்திய நிலையங்கள்' என்பதை அனைவரும் அறிவார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இளைஞர் யுவதிகள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார்கள். அண்மையில் தொம்பே பகுதியில் கள்ளச்சாராயம் ஸ்டிக்கருடன் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவித்துள்ள நிலையிலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. கறுப்பு பொருளாதாரம் முழு நாட்டையும் தற்போது ஆக்கிரமித்துள்ளது. இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக...

2024-02-23 12:39:32
news-image

தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் மணல்...

2024-02-23 12:36:10
news-image

நாட்டில் 40,000க்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்...

2024-02-23 12:35:00
news-image

1,000 வேன்களையும் கார்களையும் இறக்குமதி செய்ய...

2024-02-23 11:39:44
news-image

இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம்...

2024-02-23 11:38:08
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்...

2024-02-23 11:29:33
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2024-02-23 11:34:47
news-image

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ பிரதி...

2024-02-23 12:19:39
news-image

யாழ். நல்லூரில் விபத்து - ஒருவர்...

2024-02-23 11:06:48
news-image

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 1,500 சிறுவர்கள்...

2024-02-23 10:52:06
news-image

எல்ல மலையில் ஏறிய 22 வயது...

2024-02-23 10:48:26
news-image

இலங்கையின் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஆதரவளிக்கும்...

2024-02-23 10:26:20