சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மன்னாரில் விழிப்புணர்வு ஊர்வலம்

06 Dec, 2023 | 04:24 PM
image

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு 'சமூகத்தை வலுப்படுத்துவோம்; எயிட்ஸை தடுப்போம்' எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நடைபவனி இன்று புதன்கிழமை (06) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிராந்திய பாலியல் நோய்கள், எயிட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.

இன்று காலை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஆரம்பமான இப்பேரணி, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வீதியூடாக மன்னார் பொலிஸ் நிலைய பிரதான வீதியை சென்றடைந்து, பின்னர், அங்கிருந்து மன்னார் பஸார் வீதியூடாக பொது விளையாட்டு மைதான வீதியை கடந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை அடைந்தது.

இந்த ஊர்வலத்தில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், எயிட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவு வைத்திய அதிகாரி, வைத்தியர்கள், பணியாளர்கள், தாதியர்கள், சுகாதார பணியாளர்கள், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

இந்த பேரணி பயணித்த வழிகளில், குறிப்பாக, மக்கள் அதிகமாக காணப்படும் இடங்களில் துண்டுப் பிரசுர விநியோகம் உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1,000 வேன்களையும் கார்களையும் இறக்குமதி செய்ய...

2024-02-23 11:39:44
news-image

இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம்...

2024-02-23 11:38:08
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்...

2024-02-23 11:29:33
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2024-02-23 11:34:47
news-image

யாழ். நல்லூரில் விபத்து - ஒருவர்...

2024-02-23 11:06:48
news-image

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 1,500 சிறுவர்கள்...

2024-02-23 10:52:06
news-image

எல்ல மலையில் ஏறிய 22 வயது...

2024-02-23 10:48:26
news-image

இலங்கையின் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஆதரவளிக்கும்...

2024-02-23 10:26:20
news-image

யுக்திய நடவடிக்கையின்போது மேலும் 729 பேர்...

2024-02-23 10:26:33
news-image

இலங்கை இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறவேண்டும்...

2024-02-23 10:28:46
news-image

போதை மாத்திரைகள் அடங்கிய 671 பொதிகளுடன்...

2024-02-23 10:28:12
news-image

கொலை முயற்சிக்கு உதவிய இருவர் கைது!

2024-02-23 10:22:53