வளிமண்டலவியல் திணைக்களத்தை நவீனமயப்படுத்தும் திட்டம் ஆரம்பம் : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

06 Dec, 2023 | 09:39 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உலக வங்கியின் நிதியுதவியுடன் வளிமண்டலவியல் திணைக்களத்தை நவீன மயப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் காலநிலை தொடர்பான அறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகளை உரிய முறையில் வெளிப்படுத்தும் வகையில்  ட்ரொப்லர் ரேடா கருவி ஒன்றை புத்தளம் பிரதேசத்தில் ஸ்தாபிப்பதற்கும்  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் மதுர விதானகே எம்பி எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எமது நாடும் தொடர்ந்து எதிர் கொண்டு வருகிறது. அதேவேளை மனிதர்களினால் ஏற்படுத்தப்படும் பாதிப்புகளும் இடம் பெறுகின்றன.

அந்த வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தை  நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தொழில்நுட்ப ரீதியில் நாம் 25 வருடங்கள் பின்னடைவு நிலையிலேயே உள்ளோம். காலநிலை தொடர்பான தகவல்களை சிறந்த வகையில் வெளிப்படுத்துவதே எமது நோக்கம். 

அந்த வகையில் உலக வங்கியில் நிதியுதவியுடன் வளிமண்டலவியல் திணைக்களத்தை நவீனமயப்படுத்தும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கான நிதியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. உலகளவில் தொழில்நுட்ப நிபுணத்துவ அனுபவத்தை பெற்றுள்ள ஆலோசகர் ஒருவரை நியமிப்பதற்கான முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் சூழல் மாசு தொடர்பில் திருப்தியடையக்கூடிய நிலைமை காணப்படவில்லை என்பதையே அதன் அறிக்கைகள் எமக்கு தெரிவிக்கின்றன.

அது தொடர்பில் பிராந்திய ரீதியான தீர்வு ஒன்றை நாம் பெற்றுக் கொள்ள வேண்டி யுள்ளது. அதற்காக ஜனாதிபதி உரிய கவனம் செலுத்தியுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், சிவில் விமான சேவை நிறுவனம் ஆகியவை இணைந்து காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.

எரிசக்தி மின்சக்தி அமைச்சு மற்றும் நீர்ப்பாசன துறைகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.அவசர எச்சரிக்கை அறிவிப்பு மற்றும் விவசாயிகளுக்கான அறிவிப்பையும் எம்மால் முன்னெடுக்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட ஜீப்...

2025-02-19 14:25:20
news-image

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குப் பின்னால்...

2025-02-19 14:24:32
news-image

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு ;...

2025-02-19 14:40:07
news-image

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - இந்திய...

2025-02-19 13:24:22
news-image

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் கீழ் 4564.5...

2025-02-19 12:47:30
news-image

திவுலபிட்டிய ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து

2025-02-19 12:29:39
news-image

"இது பாரதூரமான நிலைமை நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின்...

2025-02-19 12:30:27
news-image

ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற...

2025-02-19 12:21:04
news-image

மு.கா முக்கியஸ்தர்கள் - இலங்கைக்கான பாகிஸ்தான்...

2025-02-19 12:17:07
news-image

ஏறாவூரில் வர்த்தகரை தாக்கிய பொலிஸார் இருவரும்...

2025-02-19 12:24:25
news-image

மித்தெனிய துப்பாக்கிச் சூடு ; தந்தையும்...

2025-02-19 11:52:53
news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை...

2025-02-19 11:24:04