பரிசுப் பொருட்கள் மற்றும் கடன் வழங்குவதாக கூறி பண மோசடி - மூவர் கைது

Published By: Digital Desk 3

06 Dec, 2023 | 04:42 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பரிசுப் பொருட்கள் மற்றும் கடன் வழங்குவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சியம்பலாண்டுவ மற்றும் அத்திமலை பிரதேசங்களில் மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பல்வேறு நபர்களால் இவ்வாறான பணம் மோசடி சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதிநிதிகளாகக் தங்களை அடையாளப்படுத்திக்  கொண்டு பிரதேசவாசிகளுக்கு சுயதொழில் செய்வதற்கு நிதியுதவி வழங்குவதற்காகவும் சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்காகவும் அந்த அமைப்பின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்காக 600 ரூபா பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு வசூலிக்கப்பட்ட 26 ஆயிரம் ரூபா பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர் கடந்த 4 ஆம் திகதி ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபா பணத்தை பெற்று  வங்கியில் வைப்பிலிட்டுள்ளமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர். 

இதேவேளை நேற்றுமுன்தினம் சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இவ்வாறு பணசேகரிப்பில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் இருந்து 70,300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் எனவும் 32 வயதான குறித்த பெண் சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த 2 சந்தேக நபர்களும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இவ்வாறான மோசடிகளை செய்துள்ளார்களா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த மோசடி நபர்களிடம் சிக்க வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை தமிழர்கள் இருவரை நாடு கடத்திய...

2024-02-24 18:32:34
news-image

உத்தேச தேர்தல்களில் வெற்றி வாகை சூடுவோம்...

2024-02-24 18:10:46
news-image

வீரமிக்க பெண்களை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு...

2024-02-24 17:54:20
news-image

இந்திய மீனவர்களின் நியாயப்படுத்தலை ஏற்க முடியாது...

2024-02-24 18:22:57
news-image

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்:...

2024-02-24 17:16:25
news-image

“நாட்டிற்கான ஒன்றுபட்ட நடவடிக்கை" ஐக்கிய குடியரசு...

2024-02-24 15:53:29
news-image

சர்ச்சைக்குரிய வெள்ளையானவர்களிற்கான களியாட்ட நிகழ்வு இரத்து...

2024-02-24 15:41:55
news-image

இந்திய - இலங்கை கடல் எல்லையில்...

2024-02-24 15:21:40
news-image

ஐஸ் போதைப்பொருள் பாவனை: பொலிஸ் கான்ஸ்டபிள்...

2024-02-24 15:45:47
news-image

குருணாகல் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக மாற்று...

2024-02-24 15:08:00
news-image

உக்குவாவின் கொலையுடன் தொடர்புடைய இராணுவ வீரர்...

2024-02-24 14:32:09
news-image

கழிவுத் தேயிலையை வீட்டுக்கு எடுத்து செல்ல...

2024-02-24 13:37:39