நீதியரசர் தொடர்பில் ரிசாத்தின் குற்றச்சாட்டு பொய்யானது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் - நீதியமைச்சர் வலியுறுத்தல்

Published By: Vishnu

06 Dec, 2023 | 09:45 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நீதியரசர் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தார். அது பாரதூரமானது, ஒன்று அதை  திருத்திக் கொள்ள வேண்டும் அல்லது  கவலை தெரிவிக்க வேண்டும்.

ரிஷாட் பதியுதீன் மீது குற்றஞ்சாட்ட வேண்டிய தேவை எனக்கில்லை என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) இடம்பெற்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர்  ரிஷாட் பதியுதீன் முன்வைத்த விசேட கூற்றுக்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை,என்னை யாராவது தூண்டி விட்டிருக்கலாம் என்று அவர் குறிப்பிடுகிறார்.

நான் முன்பள்ளி மாணவர் அல்ல, பிறிதொருவர் தூண்டி விடுவதற்கு.நீதிபதிகள் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் நீதியமைச்சர் என்ற ரீதியில் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது எனது பொறுப்பாகும்.

நீதியரசரின் பெயரை குறிப்பிடவில்லை என்று அவர் குறிப்பிடுகிறார். உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஒரு முஸ்லிம் மதத்தை சேர்ந்த நீதியரசர் ஒருவரே உள்ளார் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் உரையை நான் முழுமையாக செவிமெடுத்தேன்.அவர் எவ்விடத்திலும் நீதியரசர்களின் பெயரை குறிப்பிடவில்லை என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய நீதியமைச்சர், உயர்நீதிமன்றத்தில் ஒரு முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் மாத்திரமே நீதியரசராக உள்ளார்,

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன்,.தனது உரையில் முஸ்லிம் நீதியரசர் ஒருவர் உள்ளார் நான் அவரை கண்டதும் இல்லை, பேசியதுமில்லை,

ஆனால்  அவர் முஸ்லிம்களுக்காக முன்னிலையாகுவதில்லை.அவ்வாறாயின் சிங்கள நீதியரசர்கள்,சிங்களவர்களின் வழக்குகளில் முன்னிலையாகாமல் விலக வேண்டும் 'என்று குறிப்பிட்டார்.

அதை தொடர்ந்து ராஜபக்ஷர்கள் தொடர்பில் குறிப்பிட்டார். அந்த நீதியரசர், ராஜபக்ஷர்களுக்கு  சார்பாகவும்,எதிராவும் தீர்ப்பளிக்கவில்லை. அத்துடன் எல்பிங் அம்பாந்தோட்டை வழக்கு தொடர்பில் குறிப்பிட்டார். நாட்டு மக்கள் இந்த வழக்கை நன்கு அறிவார்கள்.

இந்த வழக்கு தீர்ப்பினால் ரிஷாட் பதியுதீன்  அதிக இலாபமடைந்தார். இந்த வழக்கு தீர்ப்பின் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தில் தான் ரிஷாட் பதியுதீன் 10 ஆண்டுகள் அமைச்சராக பதவி வகித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நீதியரசர் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தார்.அது பாரதூரமானது ஒன்று திருத்திக் கொள்ள வேண்டும் அல்லது  கவலை தெரிவிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு அனைத்து இனக்குழுவினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை...

2024-07-15 16:39:26
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2024-07-15 16:41:29
news-image

தம்புள்ளையில் லொறி - வேன் மோதி...

2024-07-15 16:32:05
news-image

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி...

2024-07-15 16:40:09
news-image

மின்கட்டணத்தை குறைக்க அனுமதி - இலங்கை...

2024-07-15 15:57:49
news-image

மன்னார் கருங்கண்டல் பாடசாலையில் இலத்திரனியல் வகுப்பறை...

2024-07-15 15:59:16
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மனு தள்ளுபடி...

2024-07-15 15:06:15
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மனு- சட்டமா...

2024-07-15 14:55:14
news-image

கெப் வண்டி விபத்து ; ஒருவர்...

2024-07-15 15:32:18
news-image

மொரட்டுவையில் வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2024-07-15 14:45:17
news-image

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2024-07-15 14:46:49
news-image

ருமேனியா,போலந்துக்கு செல்லவுள்ளார் வெளிவிவகார அமைச்சர்

2024-07-15 14:43:30