எரிபொருள் விலைகளில் வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது - அமைச்சரவை பேச்சாளர்

06 Dec, 2023 | 08:09 PM
image

(எம்.மனோசித்ரா)

வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்பதற்காக, விலைகளில் வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது. உலக சந்தை நிலைவரம் மற்றும் டொலரின் பெறுமதி என்பவற்றின் அடிப்படையிலேயே எரிபொருட்களின் விலைகள் தீர்மானிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று புதன்கிழமை (06) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்த உடனேயே போட்டித்தன்மை ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது.

எவ்வாறிருப்பினும் எதிர்காலத்தில் இதனால் சிறந்த பலன் கிடைக்கும். காரணம் எரிபொருட்களை இறக்குமதி செய்வதில் காணப்பட்ட சிக்கல் நிலைமை தற்போது குறைவடைந்துள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், ஐ.ஓ.சி.யும் மாத்திரம் எரிபொருட்களை இறக்குமதி  செய்த போது, ஒரு கட்டத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு டொலர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.

இதனால் முழு நாட்டிலும் எரிபொருள் அற்ற நிலைமை கூட ஏற்பட்டது.

இவ்வாறான நிலைமை இனி ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே 3 நிறுவனங்களுக்கு போட்டித்தன்மையுடன் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் எரிபொருட்களின் விலைகளை இவற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்க முடியாது.

உலக சந்தை நிலைவரம் மற்றும் டொலரின் பெறுமதி என்பவற்றின் அடிப்படையிலேயே எரிபொருட்களின் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. இவற்றுக்கு அப்பால் சென்று எரிபொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் கைபேசி அழைப்பால் பறிபோன 2...

2025-01-25 12:33:27
news-image

மகளின் நண்பியை பாலியல் துஷ்பிரோயகம் செய்ய...

2025-01-25 12:20:10
news-image

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது!

2025-01-25 11:40:26
news-image

அநுராதபுரத்தில் புதையல்களுடன் ஒருவர் கைது !

2025-01-25 11:24:21
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி ; கடந்த...

2025-01-25 11:20:39
news-image

வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் தகராறு ;...

2025-01-25 11:00:29
news-image

யோஷித்த ராஜபக்ஷ கைது!

2025-01-25 12:23:33
news-image

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா

2025-01-25 10:38:26
news-image

யாழ். பலாலியில் 101 கிலோ கேரள...

2025-01-25 10:00:45
news-image

சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மது...

2025-01-25 10:27:23
news-image

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு...

2025-01-25 09:50:15
news-image

கல்கிஸ்ஸவில் 29 வயதுடைய போதைப்பொருள் வர்த்தகர்...

2025-01-25 09:44:02