(எம்.மனோசித்ரா)
கொழும்பு பாதுகாப்பு பேரவை உடன்படிக்கை, புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தலைமையக ஒப்பந்தத்தில் கையொப்பமிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்து சமுத்திரத்தின் பிராந்தியப் பாதுகாப்பு உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் பொதுவான பாதுகாப்புக்குள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக உறுப்பு நாடுகளின் பெறுமதிகளுக்கு மதிப்பளித்து இயங்குகின்ற ஒரு பேரவையாக கொழும்பு பாதுகாப்பு பேரவை தாபிக்கப்பட்டுள்ளது.
தற்போது இப்பேரவையில் இந்தியா, மாலைதீவு, மொரிசீயஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் உறுப்பு நாடுகளாகவும், பங்களாதேஷ் மற்றும் சீஷெல்ஸ் போன்ற நாடுகள் அவதானிப்பு நாடுகளாகவும் செயலாற்றுகின்ற பிராந்திய அமைப்பாகும்.
இப்பேரவையின் பணிகளை மிகவும் முறைமைப்படுத்துவதற்காக உடன்படிக்கையொன்றில் கையொப்பமிடுவதற்கும், கொழும்பு நகரில் தாபிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள குறித்த அமைப்பின் செயலகத்திற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உறுப்பு நாடுகளிடையே கையொப்பமிடுவதற்கும், மற்றும் செயலகத்தின் பணிகளுக்குரிய தலைமையக ஒப்பந்தமொன்றில் இலங்கை மற்றும் தலைமையக ஜெனரலுக்கும் இடையே கையொப்பமிடுவதற்கும் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM