நியுசிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்போட்டியில் பங்களாதேஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் முஷ்பிகுர் ரஹீம்தனது துடுப்பில் பட்டு விக்கெட்டை நோக்கி சென்ற பந்தை கையால் தடுத்ததால் ஆட்டமிழந்துள்ளார்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. இதில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்றதுடுப்பாட தீர்மானித்தது. அதன்படி மஹ்முதுல்லா ஹசன் ஜாய் மற்றும் ஜாகீர் ஹாசன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து மமினுல் ஹக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து முஷ்பிகுர் ரஹீம் மற்றும் ஷஹாதத் ஹூசைன் இருவரும் ஜோடி நிதானமாக விளையாடினர். இதில் முஷ்பிகுர் ரஹீம் 83 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்ஸ் உள்பட 35 ரன்களில் ஆட்டமிழந்தார். பந்தை தனது கையால் தொட்ட நிலையில்- களத்தை தடுத்தல்) என்ற முறையில் ஆட்டமிழந்தார். அதாவது போட்டியின் 41ஆவது ஓவரை கைல் ஜேமிசன் வீசினார். அந்த ஓவரின் 4ஆவது பந்தை எதிர்கொண்ட முஷ்பிகுர் ரஹீம் தடுத்தார். பந்து பேட்டில் பட்டு ஸ்டெம்பிற்கு வருகிறது என்று நினைத்து பந்தை தனது கையால் தடுத்துள்ளார்.
இதன் காரணமாக நியூசிலாந்து வீரர்கள் அப்பீல் செய்யவே கள நடுவர் மூன்றாவது நடுவரிடம் முறையிட அவரும் உடனடியாக அவுட் கொடுத்தார். முதல் முறையாக வங்கதேச வீரர் பந்தை தனது கையால் தடுத்த நிலையில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பேட்ஸ்மேனை ஆட்டமிழக்க வைக்கும் ஒன்பது முறைகளில் களத்தை தடுப்பதும் ஒன்றாகும். இந்த முறையில் தான் தற்போது வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் ஆட்டமிழந்துள்ளார். .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM