காருடன் கடத்தப்பட்ட தனியார் பல்கலைக்கழக மாணவன் : தெஹிவளையில் சம்பவம்!

Published By: Digital Desk 3

06 Dec, 2023 | 02:37 PM
image

தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில்  பட்டப்படிப்பை மேற்கொள்ளும் 18 வயது மாணவனை சொகுசு காருடன் கடத்திச் சென்று பலவந்தமாக மாணவனுக்குச் சொந்தமான  காணி ஒன்றை பதிவு செய்ய முயற்சித்த தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடத்தப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர்களால் கடத்தப்பட்ட  காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட மாணவன் கடந்த 4ஆம் திகதி தனது தந்தையை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறக்கி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் களுபோவில ஆசிரி மாவத்தையில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறிய போது கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெஹிவளை மாநகர சபைக்கு அருகாமையில் மாணவன் பயணித்த சொகுசு காரின் பாதையை வேன் ஒன்று குறுக்கே  மறித்து  வேனிலிருந்து   இறங்கிய நான்கு இளைஞர்கள் குறித்த காருக்குள் ஏறி அந்தக்  காரை  மாணவனுடன் கடத்திச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை...

2024-09-07 18:28:56
news-image

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றிபெற்று தமிழர்களின்...

2024-09-07 22:59:45
news-image

அநுர கூறுவதைப் போன்று சிங்கள மக்களின் ...

2024-09-07 18:22:22
news-image

மாகாண சபை முறைமையை மீண்டும் பலப்படுத்தி...

2024-09-07 22:26:01
news-image

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்

2024-09-07 14:22:14
news-image

கடந்து வந்த பாதையை ஜனாதிபதி மறந்துவிட்டார்...

2024-09-07 18:17:06
news-image

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்...

2024-09-07 17:30:15
news-image

கருத்துச் சுதந்திரம் பாதிப்பற்ற வகையில் கண்காணிக்கப்பட...

2024-09-07 18:12:30
news-image

சிலாபம் - புத்தளம் வீதியில் விபத்து;...

2024-09-07 18:25:56
news-image

ராஜபக்சர்கள் சீரழித்த நாட்டை மீண்டும் ரணில்,...

2024-09-07 21:53:36
news-image

கல்முனையில் யானையால் தாக்கப்பட்டு யாசகர் பலி

2024-09-07 17:57:54
news-image

பொத்துவில் பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2024-09-07 17:35:27