புதுடில்லி அப்பலோ மருத்துவமனையில் சிறுநீரக மோசடி - அம்பலப்படுத்தியது டெலிகிராவ் - விசாரணைகள் ஆரம்பம்

Published By: Rajeeban

06 Dec, 2023 | 01:07 PM
image

சிறுநீரக மோசடி தொடர்பில் இந்தியாவின் அப்பலோ மருத்துவமனையை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு இந்தியாவின் சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

மியன்மார் பிரஜைகளிடம் சீறுநீரக மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் இதில் புதுடில்லியின் அப்பலோமருத்துவமனைக்கு தொடர்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டனின் டெலிகிராவ் இதனை தெரிவித்துள்ளது.

மியன்மாரை சேர்ந்த வறிய கிராமத்தவர்களை புதுடில்லிக்கு அழைத்துவந்துஅவர்களின் சிறுநீரகத்தை பெற்றுக்கொண்ட பின்னர் பணம் வழங்கப்பட்டதாக டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.

மியன்மாரை சேர்ந்த வசதிபடைத்த சிறுநீரக நோயாளிகளுக்கு இந்த சிறுநீரகங்கள் வழங்கப்பட்டன என டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

இந் செயற்பாடுகளிற்காக போலியான ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாக டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 22 ம் திகதி 58 வயதான நபர் பணம் செலுத்தி புதிய சிறுநீரகத்தை பெற்றுக்கொண்டார் என தெரிவித்துள்ள டெலிகிராவ் புதுடில்லி அப்பலோ மருத்துவமனையிலேயே இந்த சத்திரசிகிச்சை இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளது.

டெலிகிராவ் செய்தியாளர் சிறுநீரக பாதிப்பிற்குள்ளான ஒருவரின் உறவினர் போல நடித்து மியன்மாரில் உள்ள அப்பலோ மருத்துவமனையின் கிளையை நாடியுள்ளார்,அதற்கு அவர்கள் குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தினால் சிறுநீரகத்தை எற்பாடு செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உத்தரப் பிரதேசத்தில்குளத்தில் டிராக்டர் விழுந்து விபத்து:...

2024-02-24 15:46:03
news-image

240 மில்லியன் ஆண்டுகள் பழமையான ட்ரேகன்...

2024-02-24 18:08:01
news-image

அலெக்ஸி நவால்னியின் மரணம் - ரஸ்ய...

2024-02-24 12:48:30
news-image

'தமிழக மீனவர்களுக்கு சிறைத் தண்டனையா?' -...

2024-02-24 09:43:06
news-image

‘சீதா’, ‘அக்பர்’ சர்ச்சை முடிவுக்கு வந்தது

2024-02-24 09:34:49
news-image

ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் உடலை இரகசிய...

2024-02-23 10:41:56
news-image

நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய தனியார்...

2024-02-23 10:45:52
news-image

மணிப்பூர் வன்முறைக்கு வித்திட்ட சர்ச்சை தீர்ப்பை...

2024-02-23 09:52:02
news-image

ஸ்பெயினில் வலென்சியா நகரில் தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய...

2024-02-23 05:53:23
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேலிய படையினரை விலக்குமாறு...

2024-02-22 17:11:14
news-image

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு சிறை: மத்திய...

2024-02-22 16:57:57
news-image

டெல்லி போராட்டக்களத்தில் மேலும் ஒரு விவசாயி...

2024-02-22 11:26:32