இவ்வருடத்திற்கான சிறந்த சொல்லாக கவர்ச்சி என பொருள்படும் ரிஸ் என்ற சொல்லை ஒக்ஸ்போர்ட் அகராதி தெரிவு செய்துள்ளது.
“ரிஸ்” (RIZZ) என்றால் கவர்ச்சி என பொருள். இது குறித்து அகராதி வெளியீட்டாளர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பிரஸ் தெரிவிக்கையில்,
"கரிஸ்மா" என்ற சொல்லில் இருந்து "ரிஸ்" என்ற சொல் உருவானது. இது "நடை, வசீகரம் அல்லது கவர்ச்சியின் மூலம் ஒரு நபரின் காதல் துணையை ஈர்க்கும் திறனைக் குறிக்கிறது.
இந்த சொல்லுக்கு பொதுமக்களிடமிருந்து 32,000 வாக்குகளை பெற்றுள்ளது.
Buzzfeed நேர்காணலில் ஸ்பைடர் மேன் திரைப்பட நடிகர் டாம் ஹாலண்டிடம் உங்கள் கவர்ச்சியின் (rizz ) ரகசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய பின்பு "Rizz" என்ற சொல் பிரபலமடைந்தது. அதற்கு அவர் “எனக்கு எந்தவிதமான கவர்ச்சியும் இல்லை. எனக்கு மட்டுப்படுத்தப்பட்ட கவர்ச்சியே உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த சொல்லை ஒரு நபரை ஈர்க்க அல்லது அரட்டையடிக்க சொற்றொடரில் "rizz up" என்று ஒரு வினைச்சொல்லாகவும் பயன்படுத்தலாம்.
வருடத்திற்கான புதிய சொற்களின் பட்டியலில் புதியசொல் இடம் பெற வேண்டிய அவசியமில்லை என்றாலும், அவை குறிப்பிட்ட வருடத்திற்கு ஒரு முக்கியத்துவத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
இவ்வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான சொல் “வருடத்தின் மனநிலை, நெறிமுறைகள் அல்லது ஆர்வங்களை பிரதிபலிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 8 சொற்கள் இறுதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. அதில் அதிக வாக்குகளை“rizz” பெற்றிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM