நீதிமன்ற உத்தரவை மீறியவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர் : நீதியமைச்சர்

06 Dec, 2023 | 08:08 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால் தடை செய்யப்பட்ட அமைப்பின் கொடி,இலட்சினைகள் ஆகியவற்றை பயன்படுத்த முடியாது.

நீதிமன்றத்தின் உத்தரவை மீறியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இவ்விடயத்தின் நான் ஒன்று செய்ய முடியாது.

கைது செய்வதற்கு எவரும் கட்டளை பிறப்பிக்கவில்லை.பொலிஸார் தமது கடமையை செய்துள்ளார்கள் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பயங்கரவாத தடைச்சட்டத்தை  நீக்குவதற்கு 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

குற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டு குறுகிய காலம் காலவகாசம் வழங்கப்பட்டது.சகல தரப்பினரது ஆலோசனைகளுக்கும் அமைய தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்டமூலம் தயாரிக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி,புதிய சட்டத்தை உருவாக்க முன்வைக்கப்பட்ட சட்ட நகலை ஒரு தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் சலாலுக்குட்படுத்தினார்கள்.

இவ்வாறான நிலையில் 2019.ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் அப்போது  கடுமையாக பயன்படுத்தப்பட்டது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பு நாட்டு மக்களின் உயிரை பாதுகாப்பதற்காகவே பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.இதில் ஆட்சியாளர்களை குறை கூற முடியாது.அது அவர்களின் பொறுப்பாகும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றது.

இவ்வாறான நிலையில் கடந்த ஆண்டு  முதல் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டமூலத்தை சமர்ப்பித்தேன்,அந்த சட்டமூலம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்தரப்பினர் மாறுப்பட்ட கருத்துக்களை முன்வைத்ததால் அதனை வாபஸ் பெற்று முதல் நகலை திருத்தம் செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்தேன்.

உத்தேச பயங்கரவாத தடைச்சட்டமூலம் தொடர்பில்  வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சுவாரத்தையில் ஈடுபட்டு அவர்களின் நிலைப்பாட்டையும் பெற்றுக்கொண்டுள்ளேன்.எதிர்வரும் மாதமளவில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிடுகிறார்.ஆனால் அவரை கொலை செய்ய முயற்சித்தவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.நாம் அனைவரும் மனிதர்கள்.ஆகவே உறவுகளின் முக்கியத்துவத்தை மதிக்க வேண்டும்.

ஆனால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயர்,இலட்சினைகள் ஆகியவற்றை பயன்படுத்த முடியாது.

அண்மையில் இடம்பெற்ற நினைவேந்தல் தினத்தன்று  நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயற்பட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.அது பொலிஸாரின் பொறுப்பு.இவ்விடயத்தின் நான் என்ன செய்ய முடியும்.இவர்களை கைது செய்வதற்கு எவரும் கட்டளை பிறப்பிக்கவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக...

2024-02-23 12:39:32
news-image

தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் மணல்...

2024-02-23 12:36:10
news-image

நாட்டில் 40,000க்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்...

2024-02-23 12:35:00
news-image

1,000 வேன்களையும் கார்களையும் இறக்குமதி செய்ய...

2024-02-23 11:39:44
news-image

இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம்...

2024-02-23 11:38:08
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்...

2024-02-23 11:29:33
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2024-02-23 11:34:47
news-image

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ பிரதி...

2024-02-23 12:19:39
news-image

யாழ். நல்லூரில் விபத்து - ஒருவர்...

2024-02-23 11:06:48
news-image

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 1,500 சிறுவர்கள்...

2024-02-23 10:52:06
news-image

எல்ல மலையில் ஏறிய 22 வயது...

2024-02-23 10:48:26
news-image

இலங்கையின் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஆதரவளிக்கும்...

2024-02-23 10:26:20