போலியான முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட 43 மில்லியன் ரூபா பெறுமதியான போதைபொருள் மாத்திரைகள் மீட்பு

06 Dec, 2023 | 01:03 PM
image

ஜேர்மனி மற்றும் இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட போதைப்பொருள் மாத்திரைகள் அடங்கிய பொதிகளை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

மத்திய தபால் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது போதைப் பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் போதைபொருள் மாத்திரைகள் அடங்கிய 25 பொதிகளை  சோதனை  செய்த போது குறித்த  போதைபொருள் மாத்திரைகள்  கைப்பற்றப்பட்டுள்ளன.  

இவை கொழும்பு, மஹரகம, பத்தரமுல்லை, பொரலஸ்கமுவ, பாணந்துறை, மொரட்டுவ மற்றும் கண்டி ஆகிய பகுதிகளின்  முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள்  தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது போதைபொருள் மாத்திரைகள் அனுப்பப்பட்ட முகவரிகள் போலியானது என்பதுடன்,  குறித்த  போதைபொருள் மாத்திரைகளின் பெறுமதி சுமார் 43 மில்லியன் ரூபா என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கைப்பற்றப்பட்ட போதைபொருள் மாத்திரைகள் அடங்கிய பொதிகள் மேலதிக விசாரணைகளின் பின்னர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்  இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23