மக்கள் வங்கி உலக வங்கி தினத்தை சேவை மற்றும் புத்தாக்கத்தின் பாரம்பரியத்துடன் கொண்டாடுகிறது

Published By: Vishnu

06 Dec, 2023 | 12:08 PM
image

இலங்கையின் வங்கிச்சேவை மற்றும் நிதித்துறையில் முன்னோடியாகத் திகழும் மக்கள் வங்கி, சர்வதேச வங்கி தினத்தை கொண்டாடுகிறது. சர்வதேச வங்கிகள் தினம் என்பது நமது அன்றாட வாழ்வில் வங்கிகளின் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் ஒரு உலகளாவிய அனுட்டிப்பு நிகழ்வாகும்.

ஆண்டுதோறும் நடத்தப்படும், இந்த தினம் நமது நிதியியல் கட்டமைப்புகளின் முதுகெலும்பாக இருக்கும் ஸ்தாபனங்களுக்கு கௌரவம் செலுத்துகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு அனுசரணையளிப்பது, சேமிப்பை வளர்ப்பது மற்றும் உலகளாவில் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு அத்தியாவசிய நிதிச் சேவைகளை வழங்குவதில் வங்கிகளின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.

14.7 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர் தளம் மற்றும் ரூபா. 3 டிரில்லியனுக்கும் அதிகமான திரட்டிய சொத்துக்களுடன், மக்கள் வங்கி இலங்கை முழுவதும் வங்கிச்சேவையை வெகுசனங்கள் மத்தியில் எடுத்துச்செல்வதில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. வளர்ச்சிக்கான முன்னேற்றத்தைத் தழுவி, தொலைதூர பின்தங்கிய பிரதேசங்களிலும் கூட அதிநவீன டிஜிட்டல் சேவைகளை வங்கி விரிவுபடுத்துகிறது.

மக்கள் வங்கி கடந்த பல ஆண்டுகளாக, நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கை வகித்து, தேசத்தின் பெருமை என்ற பெயரைச் சம்பாதித்துள்ளது. நாடு முழுவதும் 747 சேவை நிலையங்களுடன், தனிநபர்கள் மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு முழுமையான சேவைகளை வங்கி வழங்குகிறது. அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கு நிதியளிப்பதில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் தனது அர்ப்பணிப்பை அது மேலும் எடுத்துக்காட்டுகிறது.

தொற்றுநோய் காலத்தில், மக்கள் வங்கி, அதன் Mahajana Mehwara வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் மூலம், கோவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முக்கிய அரச வைத்தியசாலைகளுக்கு ரூபா. 20 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள முக்கிய மருத்துவ உபகரணங்களுக்கு நிதியளித்தது. சமூக சேவைக்கான வங்கியின் அர்ப்பணிப்பில் சீமாட்டி ரிட்ஜ்வே மற்றும் காசல் வைத்தியசாலைகளுக்கு நன்கொடைகள் ரூபா. 10 மில்லியனுக்கும் அதிகமானவை என்பதுடன், மற்றும் பின்தங்கிய பாடசாலைகளுக்கு சூரிய மின்சக்தியில் இயங்கும் மின்சார உற்பத்தி கட்டமைப்புகளை வழங்குதல் ஆகியவை அடங்கும்.

1961 ஆம் ஆண்டு சட்ட இலக்கம். 29 இன் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் வங்கி கூட்டுறவு வணிகம் மற்றும் கிராமிய வங்கிச்சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. மொழியியல் தடைகளை தகர்த்து, சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்து, வங்கி சேவையை அனைவருக்கும் அணுகக்கூடியதாக வங்கி மாற்றியது.

விவசாயக் கடன்கள், அடகு வைத்தல், சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக் கடன்கள், மகளிர் சேமிப்புக் கணக்குகள் மற்றும் சிறுவர் சேமிப்புக் கணக்குகள் போன்ற புத்தாக்கமான திட்டங்களை அறிமுகப்படுத்தியதில் இருந்து, 2015 ஆம் ஆண்டில் ஒரு விரிவான டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது வரை, மக்கள் வங்கியானது வங்கிச்சேவையின் பரிணாம வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது. இன்று, 70% க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் செயலாக்கப்படுகின்றன. இது எளிமை, பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்கிறது. இப்போது மக்கள் வங்கி புத்தாக்கமான திட்டங்களில் கவனம் செலுத்தி, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமூகத்தின் அனைத்து மட்டங்களுக்கும் வங்கிச் சேவையை மிகவும் வசதியானதாக மாற்றுகிறது.

பொறுப்புள்ள அரச வங்கியாக, ஏற்றுமதி, கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் நிதி உதவிகளை வழங்கி, நாட்டின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு மக்கள் வங்கி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. வங்கியானது உலகளவில் 900 க்கும் மேற்பட்ட வங்கிகளுடன் ஒத்துழைத்து, சாதாரண வாழ்க்கையை நிலைநிறுத்துவதற்கு முக்கியமான இறக்குமதி-ஏற்றுமதி வர்த்தகங்களை எளிதாக்குகிறது.

SLIM Nielsen People's Awards, National Business Excellence Awards மற்றும் Asia Money, SAFA மற்றும் The Asian Digital Finance Forum ஆகியவற்றின் விருதுகள் மற்றும் பாராட்டு அங்கீகாரங்கள் போன்றவற்றுடன், மக்கள் வங்கியின் மகத்துவம் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த உலக வங்கி தினத்தில், மக்கள் வங்கி அரவணைக்கும் வங்கிச்சேவை, புத்தாக்கம் மற்றும் தேசத்தின் முன்னேற்றத்திற்கான ஓயாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரெடிஸன் ஹோட்டல் கொழும்பில் பொம்பே நைட்ஸ்...

2024-02-21 16:36:47
news-image

டிஜிட்டல்‌ மயமாக்கத்துடன்‌ வாடிக்கையாளர்‌ சேவையை மேம்படுத்த...

2024-02-21 09:41:04
news-image

அகில இலங்கை மும்மொழி கட்டுரைப் போட்டி...

2024-02-20 14:58:28
news-image

மக்கள் வங்கியின YouTube ஊக்குவிப்பு சீட்டிழுப்பின்...

2024-02-16 13:37:55
news-image

Fentons Limited, Hayleys Fentons Limited...

2024-02-15 21:19:41
news-image

20 டைவ்களை நிறைவுசெய்த ஜோன் கீல்ஸ்...

2024-02-15 21:20:51
news-image

தேசிய தர விருது விழாவில் இலங்கை...

2024-02-14 11:09:37
news-image

ஸ்ரீ லங்கா காப்புறுதி ஒரு புதிய...

2024-02-12 18:00:39
news-image

கிழக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான எதிர்பார்ப்புடன்...

2024-02-11 21:36:52
news-image

பயன்படுத்திய வாகனங்கள் மீதான VAT வரி ...

2024-02-07 21:11:18
news-image

சம்பத் வங்கியின் முயற்சியுடன் வவுனியா கிடாச்சூரி...

2024-02-07 20:56:00
news-image

முடி அகற்றுவதில் புரட்சிகர உயர் அம்சங்களுடன் ...

2024-02-07 20:55:00