ஆசிய கிண்ணப்போட்டிகளுக்காக19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி துபாய் புறப்பட்டது

06 Dec, 2023 | 11:27 AM
image

ஆசிய கிண்ணப்போட்டிகளுக்காக19 வயதுக்குட்பட்ட இலங்கை  கிரிக்கெட் அணி துபாய் புறப்பட்டுள்ளது.

இலங்கை  அணி  இன்று புதன்கிழமை (06) அதிகாலை 02.55 மணியவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து  எமிரேட்ஸ் விமானம்  மூலம் துபாயிற்கு புறப்பட்டது. 

இலங்கை அணிக்கு ரோயல்கல்லூரியின் சினெத் ஜெயவர்த்தன தலைமை தாங்குகின்றார்.

இது  தொடர்பில் கட்டுநாயக்கவில் சினெத் ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில், 

நாங்கள் நல்ல மனநிலையில் இருக்கிறோம். இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பல்லேகல மற்றும் காலி மைதானங்களில் பல பயிற்சிப் போட்டிகளிலும் பங்குபற்றியுள்ளார்கள். அவர்கள் இந்த ஆசிய சாம்பியன்ஷிப்பை வெல்வார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன் என்றார்.

இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்கும் முதல் போட்டியானது  எதிர்வரும்  09 ஆம் திகதி   ஜப்பான் அணிக்கு எதிராக நடைபெறும் என்று அவர் மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்