குருநாகல் - மாவத்தகம பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் பலியானவர் அப்பகுதியைச் சேர்ந்த 65 வயதான வர்த்தகர் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளுக்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம்  தெரிவித்துள்ளது.