பிரகாபரனின் பிறந்தநாளை நினைவேந்தலென்று அனுஸ்டிக்க இடமளிக்க முடியாது - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

06 Dec, 2023 | 09:27 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்)

பிரபாகரனின் பிறந்த தினத்தை நினைவேந்தல் என்று அனுஷ்டிக்க இடமளிக்க முடியாது. எதிர்காலத்தில்  இவ்வாறு செயற்பட்டால் கைதுகள் தொடரும். பயங்கரவாத தடைச்சட்டம் நாட்டின் சட்டம். தேசிய பாதுகாப்புக்கு முரணான செயற்பாடுகளுக்கு இடமளித்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆகவே முறையற்ற வகையில் செயற்பட வேண்டாம் என தமிழர் பிரதேசத்துக்கு குறிப்பிடுங்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தமிழ் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (05) தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த பயங்கரவாத தடைச்சட்டம் கீழான கைதுகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மாவீரர் நினேவேந்தல் நிகழ்வன்று 11 பேர் கைது செய்யப்பட்டனர். மூன்று நீதிமன்றங்கள் நினைவேந்தலுக்கு தடை விதித்துள்ளன. யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு நாங்கள் தடை விதிக்கவில்லை. பிரபாகரனின் பிறந்த தினத்தன்று கொடிகளை ஏந்திக் கொண்டு சென்றவர்கள்  முரன்பாடான விதத்தில் செயற்பட்டுள்ளார்கள். படங்களில் தெளிவாக தெரிகிறது. அதன் பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

நினைவேந்தல் நிகழ்வில் பிரகாபரனின் உருவத்திலான கேக்,டீசர்ட்,மற்றும் புலி கொடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு இடமளிக்க முடியாது. தமிழ் பிரதிநிதிகள் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை பேசுகிறார்கள். அவ்வாறாயின் அவர்கள் இவ்வாறான தடை செய்யப்பட்ட விடயங்களுக்கு இடமளிக்க கூடாது. அவர்களும் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும்.

பொன்னம்பலம் உட்பட தமிழ் பிரதிநிதிகள் பொலிசாரை தமிழர்கள்  புறக்கணிப்பதாக குறிப்பிடுகிறார்கள் ஆனால் அவர்களின் பாதுகாப்புக்கு பொலிசாரை கேட்கிறார்கள். இதுவே உண்மை. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இடம் பெற்றாலும் கைதுகள் இடம் பெறும். பயங்கரவாத தடைச்சட்டம் நாட்டின் சட்டம் அது செயற்படுத்தப்படும். முறையற்ற செயற்பாடுகளை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின் வடக்கு மற்றும் கிழக்கில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று தமிழர்களிடம் குறிப்பிடுங்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்தவர்களை பொலிஸ் காவலில் வைக்கவில்லை. கைது செய்யப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள். நீதிமன்றத்தின் உத்தரவுடன் தான் அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே அவர்களை விடுவிப்பது,பிணை வழங்குவதை நீதிமன்றமே தீர்மானிக்கும். நாங்கள் தீர்மானிக்க முடியாது. முரண்பாடுகளை ஏற்படுத்தாமல் நாட்டின் சட்டத்துக்கு அமைய செயற்படுங்கள் அதுவே நல்லிணக்கம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாரியப்பொலவில் இலங்கை விமானப்படை விமானம் விபத்து...

2025-03-21 09:47:43
news-image

மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை வெளியேறவேண்டும்...

2025-03-21 08:32:13
news-image

சங்கின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு -...

2025-03-21 09:39:24
news-image

யாழில் 17 சபைகளிலும் தேசிய மக்கள்...

2025-03-21 09:39:04
news-image

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2025-03-21 09:38:15
news-image

வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை...

2025-03-21 09:37:48
news-image

யாழில் 22 கட்சிகளும் 13 சுயேட்சைகளும்...

2025-03-21 09:37:26
news-image

இன்றைய வானிலை

2025-03-21 06:18:19
news-image

எனக்கு பட்டலந்த குறித்து பேசுவதில் தற்போது...

2025-03-21 06:14:02
news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27