வெளியானது விஷால் படத் தலைப்பு!

05 Dec, 2023 | 05:54 PM
image

‘தாமிரபரணி’, ‘பூஜை’க்குப் பிறகு, விஷால் - ஹரி இணைந்திருக்கும் படம் ‘ரத்னம்’. விஷாலின் 34வது படமான இந்தப் படத்தின் தலைப்பும் முதல் பார்வையும் நேற்று வெளியானது. இதை, விஷால் வெளியிட்டு வைத்தார்.

கோலிவுட்டின் நட்சத்திர அதிரடி நடிகர்களுள் ஒருவரான விஷால், நீண்ட காலத்துக்குப் பின், அதிரடி இயக்குனர் ஹரியின் படத்தில் நடித்துவருகிறார். இந்தக் கூட்டணியின் வெற்றிப்பட வரிசையில், ரத்னமும் இடம்பெறும் என்று விஷால் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தப் படத்தை, ஸீ ஸ்டூடியோவுடன் இணைந்து, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனமும் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் சுமார் 2 நிமிட நேர முதற்பார்வை நேற்று வெளியிடப்பட்டது. அதில், ஹரியின் படங்களுக்கே உரித்தான, அனேகமான லொறிகள், உறுமும் எருதுகள், குதிரைகள் மத்தியில் விஷால் வருவது போன்ற காட்சியும் ஒருவரது தலையைத் துண்டிக்கும் விஷால், அந்தத் தலையை மட்டும் தூக்கிச் செல்லும் காட்சியும் அடங்கியிருக்கிறது.

இதிலிருந்து, ரத்னம் ஹரியின் வழக்கமான பாணியில் அதிரடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right