‘ட்ரெயின்’ ஏறும் விஜய் சேதுபதி - மிஷ்கின்!

05 Dec, 2023 | 05:54 PM
image

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - இயக்குனர் மிஷ்கின் இணையும் முதல் படத்தின் முதற்பார்வையும் படத்தின் தலைப்பும் அண்மையில் வெளியிடப்பட்டது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘ட்ரெயின்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

படம் முழுவதும் ஒரு தொடரூந்திலேயே இடம்பெறுவது போன்று அமையவிருக்கும் இந்தப் படத்துக்காக, மிகுந்த பொருட்செலவில், தொடரூந்துக்கான ‘செட்’ போடப்பட்டிருக்கிறது.

படத்துக்கான முதற்படப்பிடிப்பை இயக்குனர் வெற்றிமாறன் தொடங்கிவைத்தார். 

இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் நடிக்கிறார். மேலும், மிஸ்கினின் ஆஸ்தான நடிகரான வினய் ராய், ஐரா தயானந்த், நாசர், பாவனா, சம்பத் ராஜ், கே.எஸ்.ரவிகுமார், யூகி சேது உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கான இசையை ஏ.ஆர்.ரஹ்மான் அமைக்கவிருக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்திலும் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார் என்றாலும் அது ஒரு கௌரவ வேடம் மட்டுமே. எனவே, இருவரும் இணையும் முதல் படம் என்பது இந்தப் படத்துக்கே பொருந்தும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் நடிகர்...

2025-01-25 16:23:33
news-image

ராமாயணா தி லெஜன்ட் ஆஃப் பிரின்ஸ்...

2025-01-25 16:22:44
news-image

'ஆக்சன் கிங்' அர்ஜுன் நடிக்கும் 'அகத்தியா'...

2025-01-25 15:53:24
news-image

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட 'ட்ராமா'...

2025-01-25 15:52:56
news-image

மலேசிய பினாங்கில் 17வது எடிசன் தமிழ்...

2025-01-25 09:34:34
news-image

குடும்பஸ்தன் - திரைப்பட விமர்சனம்

2025-01-24 16:20:43
news-image

குழந்தைகள் முன்னேற்ற கழகம் - திரைப்பட...

2025-01-24 16:20:13
news-image

வல்லான் - திரைப்பட விமர்சனம்

2025-01-24 16:19:42
news-image

பாட்டல் ராதா - திரைப்பட விமர்சனம்

2025-01-24 16:19:24
news-image

'ஓஃபீஸ்' இணைய தொடரின் அறிமுக பாடல்...

2025-01-23 15:35:32
news-image

நடிகர் கவின் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்...

2025-01-23 15:33:36
news-image

மார்ச்சில் வெளியாகும் சீயான் விக்ரமின் 'வீர...

2025-01-23 15:04:22