(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா அதிகரிப்பு செய்துள்ளதால் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வு காண்பது சாத்தியப்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தின்போது எதிர்க் கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்க ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக பத்தாயிரம் ரூபாவை வழங்குவதாக வரவு செலவு திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது. அதில் ஆசிரியர்களும் உள்ளடங்குகின்றனர்.
அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அதிகரிப்பை வழங்குவதற்கு 30 பில்லியன் ரூபா நிதி செலவிடப்படவுள்ளது.
இலவச பாடநூல் வழங்குவதற்காக 15 பில்லியன் ரூபா, பகல் உணவுக்காக 16 பில்லியன் ரூபா, மாணவர்களுக்கு பாதணிகள் வழங்குவதற்காக 2 .5 பில்லியன் ரூபா ஆகியவற்றுக்கும் நிதி ஒதுக்க வேண்டியுள்ளது.
இவற்றை எந்த வகையிலும் வழங்காமல் நிறுத்த முடியாது. கண்டிப்பாக மாணவர்களுக்கு இவற்றை வழங்கியே ஆக வேண்டும்.
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அவர்களது தொழிற்சங்க உறுப்பினர்களுக்காக போராட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் அவர்கள் இது விடயத்தில் தெளிவுடன் செயற்படுவார்கள் என நான் நினைக்கின்றேன்.
அதற்கிணங்க இந்த வருடத்தில் சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது. அடுத்த வருடம் முதல் நாம் கட்டம் கட்டமாக சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துவோம். ஆசிரியர்கள் நிலைமையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM