இலங்கை சந்தைக்கு சூரிய சக்தியில் இயங்கும் நீர் பம்பிகளை அறிமுகப்படுத்தும் Hayleys Solar

05 Dec, 2023 | 05:04 PM
image

இலங்கையின் முதற்தர சூரிய சக்தி தீர்வு வழங்குநரான Hayleys Solar, இலங்கையின் நீர் விநியோக சவால்களை நிலைபேறான வகையிலும் திறனான தீர்வுகளுடனும் எதிர்கொள்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, அதன் சமீபத்திய தயாரிப்புகளான சூரிய சக்தியில் இயங்கும் நீர் பம்பிகளை உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தயாரிப்பானது, புதுப்பிக்கத்தக்க சக்திக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், விவசாயம் முதல் குடியிருப்புகள் வரை பல்வேறு துறைகளில், கணிசமான சேமிப்பையும் வழங்குகிறது.

எளிதான நிறுவல் மற்றும் திறனின் அடிப்படையிலான வகைகளில் வரும் இந்த நீர் பம்பிகள், நிலைபேறான நீர் விநியோகத்தை உறுதி செய்வதில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த தயாராகின்றன.

ஒரு தசாப்தத்திற்கும் மேலான ஒப்பற்ற சந்தை அனுபவம் மற்றும் நாடு முழுவதும் 150MW கூரை மீதான சூரிய மின்கலத் தொகுதிகளை ஒரு தசாப்தத்திற்கும் மேலான ஒப்பற்ற சந்தை அனுபவம் மற்றும் நாடு முழுவதும் 150MW கூரை மீதான சூரிய மின்கலத் தொகுதிகளை வெற்றிகரமாக நிறுவிய சாதனையுடன் உள்ள Hayleys Solar ஆனது, Hayleys Fentons இன் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பிரிவாகும்.

இந்த மேம்படுத்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த Hayleys Fentons இன் முகாமைத்துவ பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக, “விவசாயம், கால்நடை முகாமைத்துவம், சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காணப்படும் நீர் விநியோக சவால்களை இலங்கை எதிர்கொள்கிறது.

சூரிய சக்தியில் இயங்கும் நீர் பம்பிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், நாட்டில் காணப்படும் இந்த சவால்களைத் தீர்க்கவும், சீரான நீர் விநியோகத்தை உறுதி செய்யவும் ஒரு நிலைபேறான தீர்வை நிறுவனம் வழங்குகிறது.

Hayleys Solar இன் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரொஷேன் பெரேரா தெரிவிக்கையில், “இந்த புத்தாக்கமான தீர்வானது, பரந்த அளவிலான பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றதாக விளங்குகின்றது.

இது பெரிய அளவிலான நீர் விநியோகத் திட்டங்களுக்கு பசுமையான மாற்றீட்டு தீர்வாக அமைகிறது. விசேடமாக பரந்த இடங்களைக் கொண்ட, பாரிய பெருந்தோட்ட செயற்பாடுகளுக்காக, நாம் ஒரு சிறிய சூரிய நீர் பம்பித் தொகுதியை வடிவமைத்துள்ளோம்.

Hayleys Solar இன் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரொஷேன் பெரேரா தெரிவிக்கையில், “இந்த புத்தாக்கமான தீர்வானது, பரந்த அளவிலான பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றதாக விளங்குகின்றது.

இது பெரிய அளவிலான நீர் விநியோகத் திட்டங்களுக்கு பசுமையான மாற்றீட்டு தீர்வாக அமைகிறது. விசேடமாக பரந்த இடங்களைக் கொண்ட, பாரிய பெருந்தோட்ட செயற்பாடுகளுக்காக, நாம் ஒரு சிறிய சூரிய நீர் பம்பித் தொகுதியை வடிவமைத்துள்ளோம். இது பல பம்பிகளுக்கான தேவையை நீக்குவதன் மூலம், மிகவும் சிக்கனமான தீர்வாக அமைகிறது." என்றார்.

ரொஷேன் பெரேரா மேலும் தெரிவிக்கையில், "சூரிய சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த பம்பிகள் செயற்றிறனை அதிகரிக்கச் செய்வதோடு, செயற்பாட்டுக்கான செலவை கணிசமாகக் குறைக்கின்றன. இது விவசாயிகள், வீட்டு உரிமையாளர்கள், வணிக நிறுவனங்களுக்கு கணிசமான சேமிப்பை வழங்குகிறது. இலங்கையில் சூரிய ஒளி அதிகமாக இருப்பதால் இது சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலைபேறான ஒரு அணுகுமுறையாகும்." என்றார்.

"இந்த பம்பிகள் கடுமையான சூழல் நிலைமைகளைத் தாங்கும் வகையில், நீண்ட காலத்திற்கு துருப்பிடிக்காத உருக்கு நிறைவின் மூலம் நிர்மாணிக்ப்பட்டுள்ளன. பல்வேறு இடங்கள் மற்றும் காலநிலைகளுக்கு ஏற்றதாக அவை அமைகின்றன. இது நீடித்து நிலைத்திருப்பதை உறுதி செய்வதுடன், குறைந்தபட்ச பராமரிப்பு தேவையையே கொண்டுள்ளன” என ரொஷேன் பெரேரா மேலும் தெரிவித்தார்.

நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மஹேஷ் அபேவிக்ரம தெரிவிக்கையில், “இந்த தயாரிப்பை தனித்துவமாக்குவது, அதனை குறைந்த தொழில்நுட்ப அறிவுடன் எளிதாக நிறுவ முடியும் என்பதாகும்.

வாடிக்கையாளர்கள் இந்த தொகுதியை விரைவாக அமைத்து, சூரிய சக்தியால் இயக்கப்படும் நீர் பம்பிகள் மூலம் பயனடையலாம்.” என்றார்.

"நீர் முகாமைத்துவத்திற்கான ஒவ்வொரு தேவையும் தனித்துவமானது என்பதை நாம் அறிந்துள்ளோம். அதனால்தான் எமது சூரிய சக்தியில் இயங்கும் நீர் பம்பிகள் 0.5HP முதல் 2HP வரையிலான திறன்களைக் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளதோடு, அவை நாளொன்றுக்கு 25,000 லீற்றர்கள் வரை நீரை பம்பும் ஆற்றலைக் கொண்டுள்ளன." என மஹேஷ் அபேவிக்ரம மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணைகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு, 0112 102 102 எனும் இலக்கம் ஊடாக Hayleys Solar அவசர தொலைபேசியை தொடர்பு கொள்ளவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரெடிஸன் ஹோட்டல் கொழும்பில் பொம்பே நைட்ஸ்...

2024-02-21 16:36:47
news-image

டிஜிட்டல்‌ மயமாக்கத்துடன்‌ வாடிக்கையாளர்‌ சேவையை மேம்படுத்த...

2024-02-21 09:41:04
news-image

அகில இலங்கை மும்மொழி கட்டுரைப் போட்டி...

2024-02-20 14:58:28
news-image

மக்கள் வங்கியின YouTube ஊக்குவிப்பு சீட்டிழுப்பின்...

2024-02-16 13:37:55
news-image

Fentons Limited, Hayleys Fentons Limited...

2024-02-15 21:19:41
news-image

20 டைவ்களை நிறைவுசெய்த ஜோன் கீல்ஸ்...

2024-02-15 21:20:51
news-image

தேசிய தர விருது விழாவில் இலங்கை...

2024-02-14 11:09:37
news-image

ஸ்ரீ லங்கா காப்புறுதி ஒரு புதிய...

2024-02-12 18:00:39
news-image

கிழக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான எதிர்பார்ப்புடன்...

2024-02-11 21:36:52
news-image

பயன்படுத்திய வாகனங்கள் மீதான VAT வரி ...

2024-02-07 21:11:18
news-image

சம்பத் வங்கியின் முயற்சியுடன் வவுனியா கிடாச்சூரி...

2024-02-07 20:56:00
news-image

முடி அகற்றுவதில் புரட்சிகர உயர் அம்சங்களுடன் ...

2024-02-07 20:55:00