போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விசேட தேவையுடையோர் விழிப்புணர்வு வீதி ஊர்வலம்

05 Dec, 2023 | 08:46 PM
image

சர்வதேச  விசேட தேவையுடையோர் தினம் டிசம்பர் மூன்றாகும். இதனை முன்னிட்டு மருதமுனை ஹியூமன் லின்க் விசேட தேவையுடையோர் வளப்படுத்தல் மத்திய நிலையம் ஏற்பாடு செய்த போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு வீதி ஊர்வலம்  மருதமுனையில் இன்று செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்றது.

மருதமுனை பிரதான வீதியின் பெரியநீலாவணை சந்தியில் ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு வீதி ஊர்வலம் பிரதான வீதி வழியாக வந்து மருதமுனை வைத்தியசாலை, ஷம்ஸ் மத்திய கல்லூரி பாடசாலை அமைந்திருக்கும் பிரதான வீதி வழியாக மீண்டும் வளப்படுத்தல் மத்திய நிலையத்தை வந்தடைந்தது.

"போதை ஆயுளை அளிக்கும்", "ஒன்றிணைவோம் போதையை ஒழிக்க", "எங்களை ஒதுக்காதீர்கள்", போன்ற சுலோகங்கள் மற்றும் சித்திரங்களை தாங்கியவாறு மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். வீதி வழியாக சென்ற விசேட தேவையுடையோர்  மாணவர்களுக்கு தனவந்தர்கள் தமது அன்பளிப்புக்களையும் வழங்கினார்கள்.

இதில் வளப்படுத்தல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஏ.கமறுத்தின், பணிப்பாளர் சபை உறுப்பினர் எஸ்.எல்.அஜமல்கான் உட்பட வளப்படுத்தல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், சமூக மட்டத்திலான ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கர்நாடகாவில் முத்தையா முரளிதரன் ரூ.1400 கோடி...

2024-06-22 00:34:31
news-image

பொசன் பண்டிகை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண...

2024-06-22 00:19:19
news-image

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம், வாளுடன்...

2024-06-22 00:12:34
news-image

யாழில் 2024 ம் ஆண்டுக்கான சர்வதேச...

2024-06-22 00:01:03
news-image

மன்னார் முருங்கன் பகுதியில் கோர விபத்து...

2024-06-21 23:56:18
news-image

வைத்தியசாலை வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றம்!

2024-06-21 23:51:14
news-image

வங்குராேத்திலிருந்து நாடடை மீட்க அரசாங்கம் அனைத்து...

2024-06-21 21:45:12
news-image

ஜனாதிபதியின் மன்னார் விஜயம் குறித்து மீனவர்கள்...

2024-06-21 21:44:00
news-image

நீண்ட நாட்களுக்கு பழுதடையாத செமன் பக்கற்...

2024-06-21 21:40:13
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவர்...

2024-06-21 21:36:48
news-image

போதைப்பொருட்களுடன் 693 பேர் கைது !

2024-06-21 21:37:38
news-image

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான திறன் மேம்பாட்டு...

2024-06-21 21:38:56